பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்க நூலகம்

77


கொண்டு, அவற்றிலே நூலகக் காட்சி, நூலகத்துக்கு அண்மையில் வந்துள்ள நூற்பட்டியல், அவற்றின் சிறப்பு நூலகத்தின் உதவியால் மாணவர் செய்யும் பற்பல பணிகள் ஆகியவற்றை வெளியிடவேண்டும். இதன்மூலம் நூலகம் சிறப்புப்பெறுவதோடு பொதுமக்களின் நேரடித் தொடர்பையும் பெற வாய்ப்புண்டு. உள்ளுர்த் திரைப்படக் கொட்டகைகளில் வரலாற்றுத் தொடர்பான அல்லது பிற பாடத் தொடர்பான படம் திரையிடப்படுமானல் அது தொடர்பான விளக்கங்களையும் குறிப்புக்களையும் நூலகத்திலிருந்து தயாரித்துத் தரலாம். பள்ளி ஆண்டு மலரில், நூலகம் பற்றியும், அது நடைபெறும் முறை பற்றியும், அண்மையில் சேர்ந்த நூல்கள் பற்றியும் எழுதலாம். பொதுநூலகத்தலைவர், குழந்தை நூலகத்தலைவர் ஆகியோரைப் பள்ளிநூலகத்தலைவர் அழைத்து வந்து பாடத்திட்டம்பற்றிப் பள்ளியின் மன்றங்களில் பேசவைக்கலாம். குழந்தை நூலகத்தலைவர் குழந்தைகளின் உள்ளத்தை நன்கு தெரிந்தவராதலால் அவர் உதவிமூலம், பள்ளிநூலகத்தலைவர் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களையும் பிறவற்றையும் வாங்கி வைத்து மாணவர்க்கு அறிவு விருந்து அளிக்கலாம். பள்ளிநூலகத்தலைவர் பெற்றேர்களையும் பிள்ளைகளையும் அழைத்து வந்து நூலகத்தின் அமைப்யு, அதன் சிறப்பு, அதன் பயன், அதன் உண்மை, அதனல் நாடடையும் நலன் ஆகியவற்றைப்பற்றித் தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றலாம். இதனல் நூலகத்தைப் பொதுமக்கள் நனகு மதித்துச்சிறப்பிப்பர்; அதுமட்டுமன்று; அளவிலா நிதியும் அளிப்பர். வேறென்ன வேண்டும்? -


மாணவர்க்கோர் அறிவிப்பு


மாணவர்களுக்குத் தெளிவாகவும் சுருக்கமாகவும்