பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

உயர்நிலைப்பள்ளி நூலகம்


தலைவர் இருத்தல் வேண்டும். வெறுமனே நூல்களைப் பதிதலும், ஒழிந்த நேரங்களில் நூலகம் திறப்பதுமாக இருந்தால் அதற்கு நூலகத்தலைவர் என்ற ஒருவர் இருக்க வேண்டியதே இல்லை. நூலகம் அறிவுக்களஞ்சியமாகத் திகழ வேண்டும், மாணவர்க்கு அறிவு விருந்து அளிக்க வேண்டும் என்று விரும்பினல், நூலகத்தலைவர் அறிவுக் கலங்கரை விளக்கமாகவும், கல்வித்தோணியாகவும் விளங்க வேண்டும்.'

ஆசிரியர்களுக்கு ஆசிரியப் பயிற்சியோடு சிறிதளவுநூலகப் பயிற்சியும் அளித்தல் நலமாகும். அவ்வாறு இல்லையேல் ஆசிரியர்கள் கோடை கால நூலக வகுப்புக்காவது செல்லல் நலமாகும். நூலகப் பயிற்சியோடு நூலகக் கட்டிடங்களை மேற்பார்க்கும் பயிற்சியும் அளித்தல் நல்லது. இவ்வாறு இரு பயிற்சியும் பெற்றவர்கள் காலப்போக்கில் பெரிய நூலகம் அமைக்கவும் ஆளவும் தெரிந்து கொள்

வகுப்பு நூலகம் பொது நூலகத்தின் ஒரு பகுதியாகும. வகுப்பாசிரியர் வகுப்பு நூலகத்தை எளிதில் அமைக்கலாம். அது அதன் அளவில் அரிய பயனை அளிக்கவே செய்யும். வகுப்பு நூலகங்களோடு ஒவ்வொரு பள்ளியிலும் பாடநூலகங்களும் பாட ஆசிரியரின்கீழ் இயங்கல்வேண்டும். பாடஆசிரியர்கள் தமது நூலகத்தைச் சிறந்த பாட நூல்களை வாங்கி வாங்கிப் பெருக்கலாம். இவ்வாறு வாங்கும் பாடநூல்கள் பாடத்திட்டப்படி அமைந்தவையாக மட்டும் இராமல், விரிவாகவும் விளக்கமாகவும் பெரியதாகவும் இருக்கும் நூல்களாகவும் இருத்தல் வேண்டும். அதனல் மாணவர்கள் பாடத்தில் சிறந்தவர்களாக விளங்க வாய்ப்புண்டு.

தலைமையாசிரியரும் பிற ஆசிரியர்களும் மாணவர்தம் படிப்பில் அக்கறை யுடையவர்களாக இருத்தல் வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் என்ன படிக்கின்றனர் அல்லது படிக்கின்றனரா என்பதே ஆசிரியர்களுக்குத் தெரியாது. இதைத்தெரிய வேண்டுமானல் அதற்கென ஒரு பேரேடு தேவை.