பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

உயர்நிலைப்பள்ளி நூலகம்


ஊர்களில் பள்ளிநூலகமே பொதுநூலகமாகவும் இருக்குமானல் அதனல் பொருட்செலவு குறையும்; சிக்கனம் ஏற்படும். மத்திய அரசும், மாநில அரசும் நூல் வெளியீட்டுக்குப் பரிசுகள் வழங்கியும், பண உதவி செய்தும் ஆக்கம் அளித்தல் வேண்டும். ஏனெனில் நல்ல சிறந்த நூல்கள் இல்லாமல் நூலகம் சிறக்க முடியாது. இவ்வாறு ஆதரவளிக்கப்பட்டு வரும் நூல்கள் கண்ணக்கவரும் வண்ணமும் சிந்தையைக் கவரும் கருத்துச்களும் கொண்டிருக்க வேண்டும்.

நூலகத்தை ஏற்படுத்தலும், இயக்கலும், ஏற்படும் சிக்கலும் நூல்கத்தலைவருக்கு மலைப்பை உண்டாக்கலாம். என்ருலும் தகுதிமிக்க தலைவராக இருப்பின் அவர் தொல்லைகளைத் தூசெனவீசி, தடைகளை உடைத்தெறிந்துவிட்டு, உள்ள உறுதியுடன் சிறந்த முறையில் நூலகத்தை இயக்குவார்; ஏனெனில் அவருக்குத் தெரியும் அவரது வேலையின் தன்மை.

ஒவ்வொரு நூலகத் தலைவரும் தம் உள்ளத்துக்கு ஏற்றவாறு இனிய முறையில் நூலகத்தை நடத்தலாம். ஒவ்வொரு நூலகமும் அதனதன் பள்ளியின் தனிச் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணுடியாகும். என்றலும் நூலகம் நடத்துவதில் பொதுவான சில சிக்கல்கள் எழுகின்றன; அதனல் நூலகத்தின் போக்குப் பல்லாண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கின்றது என்பது அனுபவம் உணர்த்தும் உண்மையாகும். அதனல் முதன் முதலாகப் பணியாற்ற வரும் நூலகத்தலைவர் முதலில் இந்தப் பழைய முறையினைக் கடைப்பிடிக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் அவர் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். நாளாவட்டதில் அவை பிற நூலகங்களிலும் பின்பற்றப்படும்.

நூலகப்பணி புதுமையானது மட்டுமன்று; கல்வித்துறையில் களங்கமற்ற பணியுமாகும்.