பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

உயர்நிலைப்பள்ளி நூலகம்


வகைப்படுத்தும் முறை

நூலகத்திற்கு வரலாற்று நூலொன்று வாங்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கோலன் முறைப்படி வகைப்படுத்தும்போது அதற்கு 'V' என்ற எழுத்தினைக் குறியீடாக வழங்குதல்வேண்டும். இவ்வெண் வகைப்படுத்திய எண் என்று வழங்கப்படும். வரலாற்று நூல்கள் எத்தனையோ வாங்கப்படலாம். அவைகளுக்குள் வேற்றுமை தெரிதல் வேண்டும். அதற்கு நாம் நூல் எண்ணைக் (Book Number) கொடுத்தல் வேண்டும். அதனை எவ்வாறு கொடுத்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டெண்களும் சேர்ந்த ஒன்றுதான் குறிப்பு எண் (Call Number) ஆகும். இவ்வெண்ணினைக் கொண்டே ஒரு நூலைக் குறிக்கின்றேம்.

அடுத்து பொது உட்பிரிவுகளுக்குரிய எண்களை எவ்வாறு தருதல் வேண்டும் என்பதைப் பார்ப்போம். இப்பகுதிக்குரிய குறியீட்டெழுத்துக்களை எந்தப் பெரும் பிரிவுடனும் சேர்த்து எழுதிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நாட்டுப் படத்தை எடுத்துக் கொள்வோம். அதற்குரிய எழுத்து 'f' ஆகும். தரை நூல் சம்பந்தப்பட்ட நாட்டுப் படமென்ருல் 'Uf' என்றும், வரலாற்றுப் படமென்றல் 'vf' என்றும், விஞ்ஞான சஞ்சிகை என்ருல் 'Am' என்றும் எழுத வேண்டும். 'U' என்பது தரை நூல் அல்லது பூகோளத்தையும், 'v' என்பது வரலாற்றினையும், 'm' என்பது சஞ்சிகையையும் குறிக்கும். இவ்வாறே ஏனைய பொதுக் குறியீடுகளை ஒவ்வொன்றிற்கும் ஏற்பச் சேர்த்துக் கொள்ளலாம்.