பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





மனிதன் தோன்றினான்

தற்காலப் பிராணிகளைப்போன்ற மூதாதைகள் இக்காலத்தில் தோன்றின. மான், காளை காண்டாமிருகம், யானை, குதிரை, இன்னும் பல காட்டு மிருகங்கள் அப்பொழுதே வாழ்ந்தன. அதற்கு முன்னரே வாலில்லாக் குரங்குகள் தோன்றியிருந்தன. முதலில் அவை நாய்களை ஒத்திருந்தன. அதன் பின்னர் மனிதனை ஒத்திருக்கும் வாலில்லாக் குரங்குகள் தோன்றின. 10 லட்சம் வருஷங்களுக்கு முன்

மனிதனை ஒத்திருக்கும் குரங்கிலிருந்து குரங்கை ஒத்திருக்கும் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், குரங்குக்கும் இடையிலுள்ள தொடர்பு அவ்வகை மக்களே. அவர்களுக்கு ‘பிதிகாந்த்ரோபஸ்’ என்று விஞ்ஞானிகள் பெயரளித்துள்ளனர். சிறிய கருவிகளைப் பயன்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டனர். அவர்கள் மறைந்தனர். அவர்கள் வழித்தோன்றல்கள் புராதன மக்கள் (நீயண்டார்தல் மனிதன் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைத்தனர்.)