பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

3


இருந்தபோதிலும் அவையாவும், உயிர் என்பது கடவுளின் மூச்சு, அது சடத்தினுள்ளிருக்கும் வரைதான் அது இயங்கும்; உயிர்தான் சடம் வாழவும், வளரவும் காரணம் என்று போதிக்கின்றன. உயிர்மூச்சுப் போய்விட்டால் சடம் விழுந்துகிடக்கும்; அழுகும், நாறும் உயிர் கடவுளின் அம்சம்; ஆகையால் மனிதன் அதனைத் தன் அறிவால் உணரமுடியாது. அதை அடக்கியாளும் வல்லமையை என்றுமே மனிதன் பெறமுடியாது. எல்லா மதங்களும் உயிரைப்பற்றி மேற்கூறிய கொள்கைகளையே கொண்டு உள்ளன.

* பொருள் முதல் வாதம், மேற்கண்ட கொள்கைக்கு எதிரான முறையில் உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடைகாண முயல்கிறது. உலகிலுள்ள இயற்கையனைத்தையும் போல் உயிரும் பொருளே. 'பொருளற்ற சூட்சுமம்' என்று உயிரைக் கற்பனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பொருளின் ஒரு சிறப்பான வடிவமே உயிர். அதன் தோற்றமும், சிதைவும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டவை. சோதனைகள் புற உலக அனுபவம், இயற்கையை ஊன்றி நோக்குதல் முதலிய வழிகளிலேயே உயிரின் தன்மையைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். இது பொருள் முதல்வாதிகளின் கருத்து.

மேற்கண்ட அனுபவ முறைகளின் மூலம் இயற்கையை ஆராயும் வழி பயனுள்ளது என்று உயிர்நூல் வளர்ச்சி நமக்குக் காட்டுகிறது. உயிரின் தன்மையையும் இம்முறை கொண்டே அறிந்து, கம்யூனிஸ அமைப்பைச் சிருஷ்டிக்கும் மனிதனது நலன்களுக்குகந்த முறையில் உயிருள்ள இயற்கையை


* (Dialectical Materialism) இயங்கும் - இயல்: இயற்கையின் அடிப்படை மாறுதல்கள், உள்தொடர்புகள், பரிணாமம் ஆகியவற்றை ஆராயும் முறைக்கு இயங்கு-இயல் என்று பெயர். இயற்கையின் நிகழ்ச்சிகள், தோற்றங்கள் ஆகிய அனைத்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருப்பதாக இயங்கு-இயல் எடுத்துக் காட்டுகிறது. எல்லாப் பொருள்களிலும் நடைபெறுகிற எதிர் சக்திகளின் மோதுதலின் காரணமாக, இயற்கையின் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறது என்று இயங்கு-இயல் கருதுகிறது.