பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. வானமாமலை
5

ஆதிமனிதனான ஆதாம் என்பவனைக் கடவுள் களிமண்ணால் செய்து தம்முடைய மூச்சைஊதி ஆன்மாவைக் கொடுத்தாராம். இவ்வாறு இப்பொழுதிருப்பது போலவே ஆரம்பத்திலேயே உயிரினங்கள் யாவும் தோன்றின என்பது இயற்கையை மேலாழ்ந்தவாரியாக நோக்கிவந்த முடிவாகும். பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச் சுற்றி வருகிற தென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்ற மேலோட்டமான பார்வை காரணமாகவே மனிதன் புழு, பேன், மீன் போன்ற உயிருள்ளவை, தாங்களாகவே சேற்றிலும், சாணத்திலும், பூமியிலும் தோன்றுகின்றன என்று நம்பினான். எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உயிர்ப்பிராணிகள் காணப்படும் இடங்களில் எல்லாம் இவ்வாறு அவை தாமாகவே தோன்றியிருக்க வேண்டுமென்றே மனிதன் நினைத்தான். இன்றுகூட விஞ்ஞான அறிவில்லாத மக்கள் புழுக்கள் சாணத்திலிருந்தும், பூச்சிகள் அழுக்கிலிருந்தும், பேன்கள் வியர்வையிலிருந்தும் தோன்றுகின்றன என்று நம்புகிறார்கள். சாணம், இறைச்சி, அழுக்கு இவற்றில் முட்டையிட்டு, அம்முட்டைகள் குஞ்சு பொரிப்பதால் இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தியாவிலும், பாபிலோனியாவிலும், எகிப்திலும், புராதன காலத்தில் எழுதப்பட்டநூல்கள், புழுக்கள், ஈக்கள் பேன் முதலியன இவ்வாறு தாமே தோன்றுவதாக கூறுகின்றன. அவ்வாறே தவளைகள், பர்ம்புகள், முதலைகள் முத்லியன நைல் நதியின் படுக்கையிலுள்ள மண்ணினின்றும் தோன்றுவதாக எகிப்திய நூல்கள் கூறும். இக்கதைகள் மதங்களின் கூற்றுகளை ஆதாரமாகக் கொண்டவை. உயிரற்ற பொருள்களிலிருந்து உயிருள்ள பிராணிகள் தோன்றுவது தேவதைகள் அல்லது பிசாசுகளின் திருவிளையாடல் என்று மதவாதிகள் போதித்தனர். புராதன கிரேக்கப் பொருள் முதல்வாதிகள் சிலர் இக்கூற்றை ஆட்சேபித்தனர். ஆனால் பிளாட்டோ என்ற ஆன்ம வாதியின் போதனைகள் தலைக்கேறியிருந்த காரணத்தால்,