பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8
உயிரின் தோற்றம்

ஒப்புக்கொள்ளப்பட்டு வந்தன. மதக் கோட்பாடுகளோடு ஒத்துப்போகாத எந்தக் கொள்கையும் அக்காலத்தில் தலையெடுக்க முடியாது. மதமென்னும் சிப்பியின்றி கொள்கையென்னும் புழு வாழமுடியாது. இயற்கை விஞ்ஞானப் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டன. அனுபவத்தையும், நேர்முகக் காட்சியையும் அடிப்படையாகக் கொள்ளாமல், பைபிளின் போதனைகளையும், மத வியாக்கியானங்களையும் உருவாக்கிக் கொண்ட காலம் அது. கீழ்த்திசை நாடுகளிலிருந்து கணிதம், வானநூல், வைத்தியம் போன்ற துறைகளைப் பற்றி மிகவும் சொற்பமான அறிவே மேல்நாடுகளுக்கு எட்டிற்று. அரிஸ்டாடிலின் நூல்கள் ஐரோப்பாவில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. முதன்முதலில் அவருடைய கருத்துகள் அபாயகரமானவை என்று மதவாதிகள் கருதினார்கள். ஆனால் அவற்றை, மதக்கோட்பாடுகளோடு ஒட்டவைக்க முடியு மென்று கண்டதும் அவர்கள் அரிஸ்டாடிலை, கிறிஸ்துவுக்கு முன்பு தோன்றிய சிறந்த விஞ்ஞான அறிஞர் என்றுதலைக்குமேல் துக்கிவைத்துக் கூத்தாடினார்கள். “மதவாதிகள் அரிஸ்டாடிலின் போதனைகளின் சாரத்தை விட்டுச் சக்கையைப் போற்றத் தொடங்கினர்' என்று லெனின் கூறினார். “அழியாத தெய்வீக ஆவி தான் பொருளுக்கு உயிரளிப்பது என்ற மதக் கொள்கைக்கும், உயிர் தானாகவே தோன்றுவது என்ற கொள்கைக்கும் அரிஸ்டாடிலின் போதனைகள் ஆதரவளிக்கின்றன என்பதைக் கண்டு, அந்த அம்சங்களை மட்டும் போற்றி வளர்க்கத் தொடங்கினார்கள். இதற்கு உதாரணமாகத் தாமஸ் அக்யூனாஸ் என்ற மத்தியால மத போதகரின் கொள்கைகளைப் பார்க்கலாம். "தெய்வீக மருத்துவர் என்ற பட்டம் பெற்ற இம்மதாச்சாரியரது கொள்கைகளை சிறந்த தத்துவமென்று கத்தோலிக்கர்கள் போற்றுகிறார்கள். “உயிரற்ற பொருள்களினுள் உயிர் புகுந்து கொள்வதால்தான், அவை உயிர்ப் பிராணிகள் ஆகின்றன’ என்பது அவரது கொள்கை. கடலுள் இருக்கும் சேற்றில் தவளைகள், பாம்புகள், மீன்கள் போன்ற நீர்ப் பிராணிகள்