பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. வானமாமலை
13

மூலம் புதிய செடிகளும், பெரிய பிராணிகளும் உண்டாகின்றன என்று டார்வின் போதித்தார். இது பொருள் முதல்வாத அடிப்படையில் கொடுக்கப்படும் விளக்கம், அவர் கையாண்ட முறை சரித்திர முறை உயிர்நூல் பிரச்சனைகளுக்கு சரித்திர முறையைப் பயன்படுத்தியது, டார்வினது ஆராய்ச்சிகளின் சிறப்பான அம்சமாகும். டார்வினது சீடர்களில் பலர் இம்முறையைப் பின்பற்றினாலும், கருத்து முதல் கொள்கைகளையும் விடாமல் பிடித்துக்கொண்டிருந்தனர். அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் பிரசித்திபெற்ற மெண்டல் - மார்கன் கொள்கை, இவ்வாறு கருத்து முதல்வாதக் கொள்கையினடியாகப் பிறந்ததே. உயிரணுவினுள்ளிருக்கும் குரோமோசோம் என்ற பொருள்தான், வரவிருக்கும் பரம்பரைகளின் தன்மைகளை நிர்ணயிக்கிறது என்பதே அக்கொள்கை. அத்தகைய தன்மையை பரம்பரைப் பண்பு என்று அழைக்கிறார்கள். இந்த குரோமோசோம்'திடீரென்று உலகில் தோன்றி உயிரணுவினுள் நுழைந்து, அனாதிகால முதல் இன்றுவரை உயிர்களின் தன்மை மாறாமல் பரம்பரைப் பண்புகளைப் போற்றி வருகிறதாம்! ஆகையால் மெண்டல் மார்கன் - கொள்கையுடையவர்கள் உயிரின் தோற்றம் பற்றிய பிரச்சனையை மிகவும் சுலபப்படுத்திவிட்டார்கள்: ஆமாம், குரோமோசோம் திடீரென்று உலகில் வந்து குதித்தது எப்படி என்று கண்டு பிடியுங்கள். “உயிரின் தோற்றம்” விளங்கிவிடும்.

குரோமோசோமின் திடீர் பிரவேசத்தைப் பற்றியும் சில விஞ்ஞானிகள் “காரணம் கண்டுபிடித்துள்ளனர். கரி, நீர்வாயு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய ஐந்து மூலப்பொருள்களும் எப்படியோ ஒன்றுகூடி இப்பொருளைத்


六 சரித்திர முறை: ஒவ்வொரு பொருளையும் அது எவ்வகையான மாறுதல்களடைந்து அந்நிலையை அடைந்துள்ளது என்று ஆராயும் முறைக்கு சரித்திரமுறை என்று பெயர். + மெண்டல் மார்கன் கொள்கையுடையவர்கள்: மேற்கண்ட குரோமோசோம்தான் பரம்பரைப் பண்புகளை நிர்ணயிக்கின்றன; அவை சூழ்நிலைத் தாக்குதலால் மாறுவதில்லை என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்கள்.