பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14
உயிரின் தோற்றம்

அவ்வாறு உண்டான மிகவும் சிக்கலான அமைப்புடைய அணுக்கூட்டுt (Molecule) உடனே, உயிர்த்தன்மை பெற்றது. இதுதான் அவர்கள் தந்த விளக்கம். இந்த விளக்கம் ஒன்றையும் விளக்கவில்லை. குறிப்பிட்ட வாழும் நிலைமையில் உணவு கொள்ளவும், மூச்சு விடவும்,பரம்பரயை விருத்தி செய்யவும் ஆனதன்மைகள் எல்லா உயிர் பிராணிகளுக்கும் உண்டு. மிகச்சிறிய உயிர்பிராணிக்கும் இருக்கக்கூடிய இத்தன்மை திடீரென்று, தற்செயலாக எப்படி ஏற்பட்டது. இக்கேள்விக்கு இவ்விளக்கம் பதிலளிக்கவில்லை. “உயிரின் தோற்றம் இயற்கை விதிகளுக்குட்பட்டது என்ற உண்மையை விட்டுவிட்டு நமது உலக வரலாற்றில் உயிர் தோன்றிய இந்த மிக முக்கியமான சம்பவத்தை “தற்செயலாக நடந்ததென்று சொல்லும் விஞ்ஞானிகள்இக்கேள்விகளுக்கு கற்பனையில் விடைகாண முயல்கிறார்கள். தெய்வத்தின் சிருஷ்டி ஆர்வம் என்றும், கடவுளுடைய திட்டமென்றும் உயிரின் தோற்றத்துக்குக் காரணம் கூற அவர்கள் முயலுகிறார்கள். உதாரணமாக "உயிரென்றால் என்ன? - உயிரணுவின் பெளதீக அடிப்படை' என்ற நூலில் ஷ்ரோடிங்கர் என்பவரும் “உயிர் அதன் தன்மையும் தோற்றமும்” என்ற நூலில் அலெக்ஸாண்டர் என்பவரும் இன்னும் பல முதலாளித்துவ ஆசிரியர்களும் தெய்வம் உயிரைத் தோற்றுவிக்க எண்ணியதால்தான் உயிர் தோன்றியது என்று கூறுகிறார்கள். இத்தகைய கருத்து முதல்வாதக் கருத்துகளை எதிர்த்து உயிர்நூல் விஞ்ஞானிகள் நடத்தும் போராட்டத்திற்கும் மெண்டல்-மார்கன் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்கள் இடையூறு விளைவிக்கிறார்கள். எந்த உலகக்கண்ணோட்டத்திற்கும், முக்கிய பிரச்சனையான, "உயிர்


1 அணுக்கூட்டு: அணுக்கள் பொருளின் மிகச் சிறிய துணுக்கு பல பொருள்கள் இரண்டு மூன்று அணுக்கள் சேர்ந்தே காணப்படுகின்றன. இவையே அணுக்கூட்டுகள் எனப்படுவன. இவ்வணுக்கூட்டுகள் நூற்றுக் கணக்கான அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பதால் அவை சிக்கலான அமைப்புடையவை ஆகின்றன.