பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா.வானமாமலை
15

எப்படித் தோன்றியது' என்ற கேள்விக்கு பொருள் முதல் ரீதியாகப் பதிலளிக்க முடியாது என்று மெண்டல் மார்கன் வாதிகள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானது. விஞ்ஞான ரீதியில் உண்மையான ஒரே ஒரு தத்துவமான இயங்கியல் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கேள்விக்கு விடைகாண முற்பட்டால், மெண்டல் மார்கன்வாதிகளின் கருத்தை நாம் தவறென்று நிரூபிக்கலாம். இயங்கியல் பொருள் முதல் வாதத்தின்படி உயிர், பொருளை அடிப்படையாகக் கொண்டது. எல்லாப் பொருள்களுக்கும் உயிரென்னும் தன்மை இல்லை. சிலவற்றிற்குத் தான் இத்தன்மை உள்ளது. உயிர், பொருளின் சலனத்தில் ஒரு சிறப்பான வடிவம். இது ஆதிமுதல் இருந்துவரும் தன்மையல்ல. உயிருள்ள பொருள்களுக்கும் உயிருள்ளனவற்றிற்கும் அடிப்படை வேறுபாடு இல்லை. உண்மையில் உணர்ச்சியின் ஒரு கட்டத்தில் புதிய பண்பாக உயிர் தோன்றிற்று. பொருள் நிலையாக இல்லை. அது சலித்துக்கொண்டிருக்கிறது; வளர்ச்சியடைகிறது, சலனப்போக்கில் சிக்கலான புதிய வழிகளில் இயங்குகிறது. வளர்ச்சியின் முன்னேற்றமடையாத கட்டங்களில், முன்பு அதற்கிருந்திராத புதிய பண்புகள் உண்டாகின்றன. உயிர் அத்தகைய பண்புகளில் ஒன்று. பொருளின் சலன விருத்தியின் ஒரு கட்டத்தில் அது தோன்றுகிறது. ஆகையால் உயிரின் தோற்றத்தை விளக்குவதற்குப் பொருளின் சலனத்தைப் பற்றிய சரித்திரம் முழுதும் நமக்குத் தெரியவேண்டும். பொருளின் சலனத்தின் சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதே, உயிரின் தோற்றத்தைத் தெரிந்துகொள்ளும் முறையாகும். உயிர் திடீரென்று உதித்துவிடவில்லை. உயிர் திடீரென்று தோன்றுகிறது என்பவர்களது கூற்று சரியல்ல என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. மிகச்சிறிய நுண்ணுயிர்கள் கூட, உயிரற்ற பொருள்களோடு ஒப்பிடும்போது, மிகச் சிக்கலான அமைப்புடையவை. அவை திடீரென்று தோன்ற முடியாது. அவற்றிலுள்ள பொருள்கள் வெகு நீண்டகாலமாக அடைந்து வந்த