பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16
உயிரின்தோற்றம்

மாறுதல்களின் விளைவாகவே அவ்வுயிர்கள் தோன்றின. இம்மாறுதல்கள் லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன் நிகழ்ந்தவை. அதாவது உலகம் பிள்ளைப்பருவத்தில் இருந்த பொழுது அன்று சொல்லலாம். உயிர் எவ்வாறு தோன்றிற்று என்பதற்கு விடைகாண இம்மாறுதல்களைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய உலகத்தின் ஆரம்பம், வளர்ச்சி பற்றிய சரித்திரத்தையும் கற்றறியவேண்டும். “உலகத்தில் மனிதனோ, உயிர்களோ வாழ முடியாத ஒரு நிலைமை இருந்தது என்பதை இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. சேதனப் பொருள்கள் தோன்றியது உலகம் தோன்றி வெகுகாலமான பின்புதான். அவை நீண்ட பரிணாம மாறுதல்களின் விளைவு” என்று வி.ஐ. லெனின் தமது “பொருள்முதல் வாதமும், நேர் அனுபவ சித்தாந்த விமர்சனமும்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். “உலகம், ஜொலிக்கும் தீப்பிழம்பாக ஒரு காலத்தில் இருந்தது என்பது நமக்குத் தெரியும். பின்பு அது படிப்படியாகக் குளிர்ந்தது. செடிகளும், பிராணிகளும் தோன்றின. பிராணிகளின் அமைப்பில் ஏற்பட்ட அபிவிருத்தி காரணமாக சிலவகை மனிதக்குரங்குகள் தோன்றின. இதன் பின்பே மனிதன் தோன்றினான்”, “அராஜகவாதமா? சோஷலிஸமா” என்ற நூலில் ஜே.வி. ஸ்டாலின் மேற்கூறியவாறு எழுதுகிறார். பரிணாமப்பாதை வழியேதான் உயிர் தோன்றியது என்பதை இந்த மேற்கோள் காட்டுகிறது. “பொதுவாகக் கூறுமிடத்து, இதுதான் இயற்கை வளர்ச்சியடையும் பாதை’ என்று ஸ்டாலின் முடிவு கட்டுகிறார். "இயற்கையின் இயங்கியல்’ (Dialectics of Nature) argålø ஏங்கெல்ஸின் நூல் வெளியாகுமுன்பே, (1875-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கி 1895-இல் அவர் இறக்குமுன் எழுதியது.

  • சேதனப் பொருள் (organic fatter): உயிருள்ளவற்றையும், அவற்றிலிருந்து கிடைக்கும் பல பொருள்களான எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை முதலியனவற்றையும் இச்சொல் குறிக்கும்.