பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தியாயம்-2
ஆரம்பச் சேதனப் பொருள்களான
கரிநீரகப் பொருள்கள் ;
அவற்றினடியாகப் பிறந்த கூட்டுப்
பொருள்களின் தோற்றம்.

செடிகள், நுண்ணுயிர்கள், விலங்குகள் ஆகியவற்றின் உடல்கள் பெருமளவுக்குச் சேதனப் பொருள்களால் ஆக்கப்பட்டவை. ஆகவே இச்சேதனப் பொருள்கள், உயிர் தோன்றுவதற்குக் காரணமாகவிருந்தவையாதலால், உயிரின் தோற்றத்திற்கு இவையே முதல்படி என்று கொள்ளலாம்.

சேதனப் பொருள்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் முக்கியமான வித்தியாசமொன்றுண்டு. சேதனப் பொருள்கள் கரியோடு மற்ற மூலப்பொருள்கள் சேருவதால் உண்டாகின்றன. செடிகளின் பகுதிகளையும், விலங்குகளின் உடலின் பாகங்களையும், மிக உயர்ந்த உஷ்ணநிலை அடையும்வரை சூடாக்கினால் அவற்றுள் கரியிருப்பதைக் காணலாம். இவையாவும் காற்றில் எரிகின்றன. காற்றில்லாமல் சூடாக்கப்பட்டால் அவை கரியாகின்றன. கல், கண்ணாடி, உலோகங்கள் போன்ற அசேதனப் பொருள்களை எவ்வளவு நேரம் சூடாக்கினாலும் அவை கரியாவதில்லை.

சேதனப் பொருள் கரி, நீரகம், ஆக்ஸிஜன் (இவை இரண்டும் நீரில் உள்ளன) நைட்ரஜன் (ஹைட்ரஜன் காற்றில் ஏராளமாக இருக்கிறது), கந்தகம், பாஸ்வரம் முதலிய மூலப்பொருள்களோடு சேர்ந்த கூட்டுப் பொருள்களே. இம்மூலங்களோடு சேர்ந்து பலவகையான பொருள்கள்