பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20
உயிரின் தோற்றம்

இயற்கையில் காணப்படினும் அவை எல்லாவற்றிலும் கரியே அடிப்படை மூலமாக உள்ளது. நீரகமும், கரியும் சேர்ந்த கரி - நீரகப் பொருள்களே இவை யாவற்றிலும் சுலபமான அமைப்புடையவை. மண்ணெண்ணெய், பென்ஸின் பெட்ரோலியம் முதலியவை கரிநீரகப் பொருள்களே இவை யாவற்றிலும் சுலபமான அமைப்புடையவை. மண்ணெண்ணெய், பென்ஸின், பெட்ரோலியம் முதலியவை கரிநீரகப் பொருள்களே. இவற்றிலிருந்து வேறு மூலப்பொருள்களின் சேர்க்கையால் எண்ணற்ற சேதனப் பொருள்களை ரசாயன ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். அவற்றுள் சில உயிருள்ள செடி, விலங்கு களிடமிருந்து கிடைக்கும் சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் முதலிய சேதனப் பொருள்களை ஒத்திருக்கின்றன. இச்சேதனப் பொருள்கள் உலகத்தில் முதன்முதலாக எவ்வாறு தோன்றின? முப்பது வருஷங்களுக்கு முன் உயிரின் தோற்றம் பற்றி நான் ஆராயத் தொடங்கும் போது மேற்கண்ட கேள்வி ஆராய்ச்சிக்கும், புரிந்துகொள்வதற்கும் அப்பாற்பட்ட புதிராகத் தோன்றிற்று. ஏனெனில் இவ்வுலகில் இயற்கையில் உண்டாகும் சேதனப் பொருள்களில் மிகப்பல, உயிருள்ளவற்றால் அவற்றின் உடல்களுக்குள்ளேயே உண்டாக்கப் படுவதை நாம் காண்கிறோம். காற்றிலுள்ள (கரியமில வாயுவிலிருந்து) கரியைப் பிரித்து சூரியனது உஷ்ண சக்தியால் தங்களுக்குத் தேவையான சேதனப் பொருள்களை பச்சை நிறமான செடிகள் தயாரித்துக் கொள்ளுகின்றன. பச்சை நிறமாகவில்லாத விலங்குகள், காளான்கள், நுண்ணுயிர்கள் முதலியன, தங்களுக்குத் தேவையான சேதனப் பொருள்களை, செடி கொடிகளிடமிருந்தோ, வேறு விலங்குகளிடமிருந்தோ அவற்றின் பகுதிகளைப் பிரித்துப் பெறுகின்றன. இன்று உயிர் வாழும் ஜீவன்கள் இவ்வாறு கரியின் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யும் முறை, அல்லது அதுபோன்ற ரசாயன உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டே நிலைபெற்றுள்ளன. பூமியின் மேற்பரப்புக்கடியே காணப்படும் பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, பெட்ரோலியம் எண்ணெய் முதலியவை ஒரு