பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
உயிரின் தோற்றம்

செந்நிறமான கரி, வாயு ரூபத்தில் உள்ளது. இக்கோளங்களிலும் கரிவேறு மூலத்தோடு சேர்ந்த கூட்டுப் பொருள்களாக இல்லை, வேகமாகச் சலனம் செய்யும் தனித்தனி அணுக்களாகவே இருக்கிறது. இக் கோளங்களை B - வகைக் கோளங்கள் என்று அழைக்கிறோம். மேற்பரப்பில் 12,000 சென்டிகிரேடு உஷ்ண நிலையுள்ள வெள்ளைநிறமான நட்சத்திரங்களின் நிறப்பிரிகைப் படத்தில் தான் கரியும், நீரகமும் (ஹைட்ரஜன்) சேர்ந்த ஆரம்பக் கூட்டுப் பொருள்களான கரி நீரகப் பொருள்கள் இருப்பதன் அடையாளம் காணப்படுகிறது. அங்குதான் முதன்முதலில் இரண்டு மூலப்பொருள்களின் அணுக்கள் ரசாயனமுறையில் கூடி அணுக்கூட்டாக இருக்கிறது.

உஷ்ணநிலை குறையக் குறைய கரிநீரகப் பொருள்கள் இருப்பது நிறப்பிரிகைப் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. மேற்பரப்பில் 4000 உஷ்ண நிலையுள்ள கோளங்களில் இப்பொருள்கள் இருப்பது மிகமிகத் தெளிவாகத் தெரிகிறது. நட்சத்திர கோளங்களுள் சூரியன் இடைநிலையில் இருக்கிறது. மஞ்சள் நிறமானG - வகையைச்சேர்ந்த நட்சத்திரம் அது. அதன் மேற்பரப்பு 5800 முதல் 6300 வரை உஷ்ண நிலையுள்ளது. உயரேயுள்ள மேற்பரப்பில் 5000 உஷ்ணநிலை தான் உள்ளது. கீழே போகப்போக உஷ்ண நிலை அதிகம். ஆராய்ச்சி மூலம் அறிந்தவரை மேற்பரப்பின் மிக அதிகமான சூரியனது மேற்பரப்பில் கரியும் நீரகமும், மீதேன் (CH) என்ற கூட்டுப் பொருளாக இருப்பது தெரிகிறது. அதுபோலவே கரி, நைட்ரஜன் ஆகிய இரு பொருள்களின் கூட்டுப் பொருளான சயனஜன் (CN) என்ற பொருளும் இருப்பதை நிரூபித்துக் காட்டலாம். தவிர, இங்குதான் இரண்டு கரி அணுக்கள் ஒன்றுசேர்ந்த பரமானுவையும் முதன்முதல் காணமுடிந்தது. (C) சூரியனுது பரிணாம வரலாற்றுப்போக்கில் கரி ஒரு வகையான நிலையில் இருந்து, மற்றொரு நிலைக்கு மாறியுள்ளது தெரிகிறது மிக மிக உஷ்ணமான நட்சத்திரங்களில் சிதறிக்