பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.வானமாமலை

23


கிடக்கும் அணுரூபமாகவுள்ள கரி, சூரிய கோளத்தில் ஒரு அளவுக்கு, கரிநீரகப் பொருள்களாகவும், சயனஜனாகவும், டைகார்பனாகவும் இருப்பதைக் காண்கிறோம். அதாவது அணுக்கள் இணைந்து அணுக்கூட்டு ரூபமடைந்திருப்பதைக் காண்கிறோம்.

சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களின் வாயு மண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சி, உயிரின் தோற்றத்தைப் பற்றி அறிந்து விளக்கம் கூற மிகவும் முக்கியமானது. ‘ஜூபிடர்’ என்ற கிரகத்தின் வாயு மண்டலத்தில் (நீரகமும், நைட்ரஜனும் சேர்ந்த) அம்மோனிய வாயுவும் (கரிநீரகப் பொருளான) மீதேன்(CU4) C என்ற வாயுவும் உள்ளன என்று ஆராய்ச்சி மூலம் புலனாகிறது. மேற்பரப்பின் உஷ்ணநிலை - 135°C (பனிக்கட்டியின் உஷ்ண நிலைக்கும் மிகக் குறைவு) ஆக இருப்பதால் பொருள்களெல்லாம் திரவப் பொருளாகவோ திடப்பொருளாகவோ உள்ளன. இவைபோன்ற கூட்டுப் பொருள்கள் வேறு கிரகங்களிலும் இருப்பதை நிறப்பிரிகை தரிசன பதிவு செய்து காட்டுகிறது.

கிரகங்களுக்கிடையே உள்ள வெளியிலிருந்து சில வேளை பூமியை நோக்கி வந்து விழும் விண்வீழ் கொள்ளிகளை (Meteorites) ஆராய்வது மிக முக்கியமான ஆராய்ச்சியாகும். உலகில் தோன்றாத இப்பொருள்களை ரசாயன முறையிலும், சுரங்கப் பொருளை ஆராயும் முறையிலும் பகுத்து ஆராய முடியும். விண்வீழ் கொள்ளிகள், அமைப்பிலும், சேர்க்கையிலும் பூமியினடியில் பூமியின் மத்திய பாகத்திலுள்ள பொருள்களைக் கொண்டதாயிருக்கிறது. உலகம் தோன்றிய காலத்தில் அது எப்பொருள்களால் ஆக்கப்பட்டிருந்தது என்ற பிரச்சனைக்கு விடைகாண இப்பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி மிக முக்கியமானது என்பதை எளிதில் உணரலாம்.

விண்வீழ் கொள்ளிகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். முதல்வகையில் இரும்பு அதிகம் - இரண்டாம் வகையில் கல் அதிகம், முதல்வகையில் இரும்பு (90 சதம்) நிக்கல் (8 சதம்), கோபால்ட் (0.5 சதம்) என்ற உலோகங்கள் அடங்கும். இரண்டாவது வகையில் இரும்பு குறைவாகவே, அதாவது 25 சதம்