பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா.வானமாமலை
25

களில் காணப்படும் கரிநீரகப் பொருள்களும் விண் கோளங்களின் வாயு மண்டலத்தில் காணப்படும் கரிநீரகப் பொருள்களும் உயிர்களின் செயலாக அல்லாமல், அசேதன முறையிலேயே தோன்றின என்ற உண்மை ஐயமற நிரூபிக்கப் பட்டுள்ளது. சேதனக் கூட்டுப் பொருள்கள், உயிருள்ளவை தோன்றும் முன்பே தோன்ற முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. பொருள்களின் சிக்கலான சலனத்தின் உருவமே உயிருள்ள ஜந்துக்கள். அவை தோன்றும்முன்பே வானத்தில் உள்ள கோளங்களில், (அவற்றை உயிருள்ளவை இருக்க முடியாத சூழ்நிலையில்) சேதனப் பொருள்கள் தோன்றின. பல வானக் கோளங்களில் சேதனப் பொருள் இவ்வாறு தோன்றியது உண்மை என்று ஒப்புக்கொண்டால் நமது உலகத்தை மட்டும் அதற்கு விதிவிலக்கு எனக் கருதக் காரணம் என்ன? உயிருள்ளவை மூலமாக சேதனப் பொருள்கள் உண்டாக்கப் படுவது உலகம் தோன்றிய காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டதன் தற்காலத்தில்தான் தோன்றியது. உயிர்த்தன்மை பிராணிகள் தங்கள் உடலில் பொருள்களை ரசாயன மாற்றம் செய்யக்கூடிய சக்தி பெற்றதன் பின்னரே தோன்றினதென்றும், அதற்கு முன்னரே, கரிநீரகப் பொருள்களும், அவற்றினடியாகப் பிறந்த வேறு சேதனப் பொருள்களும், உயிர்களின் உதவியின்றியே தோன்றின. இவ்வாறு அனுமானிப்பதில் தவறில்லையல்லவா? பூமியின் அடர்த்தி, அதன் ஈர்ப்புச் சக்தி, பூகம்பத்தினால் ஏற்படும் அதிர்ச்சி அலைகள், இவற்றையெல்லாம் ஆராய்ந்து தரையியல் நிபுணர்கள் கீழ்க்கண்ட முடிவுக்கு வந்துள்ளார்கள். எல்லா நிபுணர்களும் பூமியின் நடுவே உலோகத்தினாலான மையமிருப்பதை ஒத்துக்கொள்ளுகிறார்கள். அதன் விட்டம் 3470 கிலோமீட்டர்கள். அதன் அடர்த்தி 10. இம்மையம் பல உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. முதல் உறை 1,700 கிலோ மீட்டர், திண்ணமுள்ளது. அடுத்த உறை பாறைகளாலானது. அதன் திண்ணம் 1,200 கிலோமீட்டர். அதற்குமேல் கடல்களாலான நீர் உறை, (நீர் உறையின் திட்டுகளான