பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26
உயிரின் தோற்றம்

தரைப்பகுதியில்தான் நாம் வாழ்கிறோம்). அதற்கும் மேலே காற்றாலான உறை இத்தனை உறைகளுக்கு நடுவே பூமியின் உலோக மையம் உள்ளது. பூமியின் மையத்தில் உள்ளபொருள்களின் அமைப்பை ஏகதேசம் துல்லியமாக நிர்ணயித்திருக்கிறார்கள். இரும்பு வீழ் கொள்ளிகளைப் போலவே, அவை உள்ளன. பெரும்பாலும் இரும்பும் சிறிதளவு நிக்கல், கோபால்ட், குரோமியம் ஆகிய உலோகங்களும் பூமியின் மையத்தில் உள்ளன. கரி, இரும்போடு சேர்ந்த கூட்டுப் பொருளாக (iron Cardie) மட்டுமே காணப்கிறது. மேற்கு கிரீன்லாந்தில் மேல்தரைக்குச்சிறிது கீழே சுத்தமான இரும்புப் பாறைகள் இருக்கின்றன. டிஸ்கோ என்ற தீவிலுள்ள ஒவிபாக் என்ற நகரத்தருகிலும் இவை போன்ற இரும்புப் பாறைகள் தரைக்குச் சமீபமாகவே இருக்கின்றன. இவை விண்வீழ் கொள்ளிகளெனவே கருதப்பட்டது. ஆனால் அது பூமியிலேயே தோன்றியதென்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொகினைட்’ என்ற தாதுப் பொருளில் இருப்பது போலவே இவ்விரும்பிலும் கரி அதிகம் சேர்ந்து காணப்படுகிறது. இவ்வுலோகப் பொருள்கள் அபூர்வமானதல்ல என்று தற்கால தரையியல் நிபுணர்கள் கண்டிருக்கிறார்கள். பலவிடங்களில் இத்தகைய இரும்புப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நமது உலகத்தின் சரித்திரத்தில் வெகு காலத்திற்கு முன்பு மிகப் பலவிடங்களில் இவை தோன்றியிருக்க வேண்டுமென்று தெளிவாகத் தெரிகிறது. பூமியின் மையத்திலிருந்து உலோகக் குழம்பு தரையை நோக்கி கொதித்து வழியும்போதோ, அல்லது தரையின் மீது பரவும்போதோ, அதில் கலந்துள்ள பொருள்கள்தண்ணீரோடும், நீராவியோடும் சேர்ந்து புதிய பொருள்களை உண்டாக்கியிருக்க வேண்டும். அவைகள், கார்பைடும், நீரும் இரசாயன வினை நிகழ்த்தும்போது கிடைக்கும் கரி நீரகப் பொருள்கள். நீரும்,