பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா.வானமாமலை
27

நீராவியும் புராதன உலகத்தின் மேற்பரப்பில் இருந்தன என்பதற்குச் சந்தேகமில்லை. நமது மாபெரும் ரசாயனி டி.ஐ. மெண்டலியேவ் இவ்வாறுதான் உலகிலுள்ள கரிநீரகப் பொருள்கள் தோன்றினவென்று விளக்கியுள்ளார். பெட்ரோலியம் கூட இவ்வாறுதான் தோன்றியிருக்கவேண்டும் என்று நிரூபிக்க மெண்டலியேவ் முயன்றார். இக்கூற்று சரியல்ல என்று தரை இயல் நிபுணர்கள் கருதிக் கைவிட்டனர். உயிருள்ளவற்றின் செயலால் மட்டுமே மண்ணெண்ணெய் உண்டாகிறது என்று அவர்கள் நிரூபித்தார்கள். ஆனால் உலோகங்களும் கரியும் சேர்ந்த கூட்டுப் பொருள்களான கார்பைடுகள் தண்ணீரோடு சேரும்பொழுதும் கரிநீரகப் பொருள்கள் உண்டாகின்றன என்பதைக் காட்சிப் பிரமாதமாக எந்த ரசாயனியாலும் காட்டமுடியாது. தற்கால இயற்கை நிலைமைகளில் கூட பூமியின் மேற்பரப்பில் கொகினைட் போன்ற பொருள்களிலுள்ள கரியின் கூட்டுப் பொருள்களான கார்பைடுகளோடு நீர் சேருவதால் சேதனப் பொருள்கள் ஏற்படுவதை தரை இயல் நேரடி ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. ஒளியின் உதவியால் தாவரங்களில் ஏராளமான அளவு சேதனப் பொருள்கள் உண்டாவதைப் போலவே, கார்பைடுகளும் நீரும் சேருவதாலும் சேதனப் பொருள்கள் உண்டாகின்றன. இவ்வாறு சேதனப்பொருள் உண்டாகும்போது, உயிருள்ளவை எவ்விதத்திலும் துணைசெய்வதில்லை. உயிருள்ளனவற்றின் தலையீடு இல்லாமலேயே கார்பைடுகளும், நீரும் செயல் புரிந்து சேதனப் பொருள்கள் தோன்றின. இது முற்காலத்தில், தற்பொழுது நிகழ்வதைவிட மிகப் பெரிய அளவில் நிகழ்ந்து வந்தது. இந்த இரசாயன வினைகளின் காரணமாக பெரிய அளவில் சேதனப் பொருள்கள் தோன்றியிருக்கக்கூடும். அவ்வாறு தோன்றிய காலத்தில் உலகில் உயிர்களே இருந்ததில்லை. மிகமிகச்சிறிய உயிருள்ள ஜந்துக்கள் கூட அப்பொழுது தோன்றவில்லை. சோவியத் வானநூலாரும், அண்டகோள் நூல் வல்லுநரும் (வி.ஏ. அம்பர்ட்சுமியான், ஜி.ஏ. ஷைன், வி.ஜி. வெஸ்ன்காவ், ஒ.