பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா.வானமாமலை
31

'அல்டிஹைட் என்ற பொருள்கள், கீடோன்' என்ற பொருள்கள் இவை தோன்றின. இவற்றில் எல்லாம், கரியும், நீரிலுள்ள ஆக்ஸிஜனும், நீரகமும் இருக்கின்றன. நீர்க்கூட்டணுவிலிருந்து பிரிந்து இவை கரிநீரகப் பொருள்களோடு சேர்ந்து இவ்வகைப் பொருள்களைத் தோற்றுவித்தன. சிற்சில வேளை இவை மூன்று தவிர, (காற்றிலுள்ள) நைட்ரஜன் என்ற மூலமும் சேர்ந்தது. இது உலகம் உண்டாகும்போது அம்மோனியா வடிவில் இருந்தது. அம்மோனியா வாயுவும், கரிநீரகப் பொருள்களின் ஆக்ஸிஜன் அடிப்பொருள்களும் கூடிய காரணத்தால் பல வகையான அணுக்கூட்டுகளைக் கொண்ட கூட்டணுக்கள் தோன்றின. இவை யாவிலும் ஆக்ஸிஜன், நீரகம், நைட்ரஜன், கரி ஆகிய நான்கு மூலங்களே இருந்தன. அவ்வாறு தோன்றிய பொருள்கள் பல அம்மோனியம் உப்புகள், அமைடுகள், அமீன்கள் முதலியவையாகும். இவ்வாறு புராதனக் கடல் நீரிலேயே இப்பொருள்கள் இருந்தன. இவை கரியிலிருந்து வேறு பொருள்களின் சேர்க்கையால் உண்டானவை. இவற்றைத்தான் இன்று சேதனப் பொருள்கள் என்று சொல்லுகிறோம். இவை உயிர்கள் தோன்றுவதற்குப் பலகோடி வருஷங்களுக்கு முன்பே தோன்றிவிட்டன. மிகச் சில அணுக்களை ஒவ்வொரு அணுக்கூட்டிலும் கொண்ட பொருள்கள் மேலே கூறப்பட்டதே ஆயினும் அவை பண்பில் மற்றையப் பொருள் வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவை புதிய பொருள் வடிவம்' என்று சொல்லலாம். இச்சேதனக் கூட்டுப்பொருள்கள், ஆரம்பத்தில் தோன்றிய சேதனப் பொருள்கள். இவற்றின் பண்புகளை அறியவும், வளர்ச்சிப் போக்கின் பரிணாமத்தை அறியவும் புதிய விதிகளை ரசாயனிகள் கையாண்டனர். அவ்விதிகள் அவற்றின் அமைப்பினின்றும், அணுக்கூட்டில் அணுக்கள் திட்டமாக அமைக்கப்பட்டுள்ள நிலையினின்றும் எழுந்தன. “உலகத்தில் உயிருள்ளவை தோன்றுமுன்னரே சேதனப் பொருள்கள் தோன்றின என்று முப்பது வருஷங்களுக்கு முன்