பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32
உயிரின் தோற்றம்

தான் வெளியிட்ட கூற்றை, சோவியத் வானநூலாரின் இன்றைய கொள்கைகள் உண்மையென நிரூபிக்கின்றன. உலகம் தோன்றுகிற சமயத்திலேயே, கரிநீரகங்களும், அவற்றின் ஆக்ஸிஜன், நைட்ரஜன் அடிப்பொருள்களும், பூமியின் ஈரமான காற்று மண்டலத்திலும், கடலிலும் தோன்ற ஆரம்பித்தன. உயிரின் தோற்றத்தை நோக்கிப் பொருள்கள் அடைந்த மாறுதலில் இது முதல் கட்டம். இது பெரிய மர்மமாகவே சமீபகாலம்வரை இருந்தது. ஆனால் இன்று இயற்கை விஞ்ஞானிகளுக்கு ஆரம்ப சேதனப் பொருள்கள் இவ்வாறுதான் தோன்றின என்பதில் சந்தேகம் ஏற்படுவதில்லை. பொருளின் பரிணாமத்தில் முதலாவதும் காலத்தால் மிகவும் நீண்டதுமான முதல் கட்டத்தைப் பற்றி ஆராய்ந்தோம். உஷ்ணமான நட்சத்திர இடைவெளியில் சிதறிக் கிடந்த அணுக்கள், உலகத்தின் புராதனக்கடலில் கரைந்திருந்த ஆரம்பச் சேதனப்பொருள்களாக எவ்வாறு மாறின என்பதைப் பார்த்தோம். இதுதான் பொருள்களின் மாறுதலில் முதல் கட்டம். அதற்கடுத்த கட்டம் என்ன?

புரதம்என்ற பொருளை ஒத்திருக்கும் கூட்டுப் பொருள்கள் தோன்றுவதற்குரிய மாறுதல்களே அவ்வடுத்த கட்டமாகும்.


புரதம்இது சிக்கலான அமைப்புடைய சேதனப்பொருள், தசையிலும், முட்டையிலுள்ள மஞ்சள் கருவிலும், பருப்பிலும் புரதம் இருக்கிறது.