பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34
உயிரின் தோற்றம்

செய்வதில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர். “உயிர்ச்சக்தி” என்ற சொல்லை இன்று விஞ்ஞானிகள் அகராதியிலிருந்தே அகற்றி விடலாம்

ஏனெனில் தாவரங்களினுள்ளும், விலங்குகளின் உடலிலும் காணப்படும் பொருள்களனைத்தையும் உயிரற்ற பொருள்களினின்றும் இன்று பெற இயலும், உலகத்தில் சேதனப்பொருள்களை உயிருள்ளவை மட்டும் உற்பத்தி செய்வதை நாம் காண்கிறோம். ஆனால் உலகத்தில் பொருள்களின் பரிணாமத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் மாறுதல்களை மட்டுமே காண்கிறோம். முன் அத்தியாயங்களில் விவரித்துள்ளபடி, சேதனப்பொருள்களின் அடிப்படைப் பொருள்களான கரிநீரகங்களும், அவற்றின் வழிப்பொருள்களும் நட்சத்திரங்களில் உயிரின் உதவியின்றியே வழிப்பொருள் தோன்றுகின்றன. நாம் வாழும் உலகத்திலும், உயிர் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே அசேதனப் பொருள்களின் எதிர் வினைகளால் கரிநீரகப் பொருள்கள் தோன்றின. இக்கரிநீரகப்பொருள்களுக்கு வேறு மூலங்களோடு கூடி பல பொருள்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் உண்டு. உடல்களில் காணப்படும் பலவகையான எல்லா சேதனப் பொருள்களுக்கும் அடிப்படைப் பொருட்கள் உயிருள்ளனவற்றில் நிகழும் மாறுதல்களுக்கும், ரசாயனநூலார் ஆய்வு கூடத்தில் நிகழச் செய்யும் மாறுதல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. சீக்கிரம்தாம் விரும்பும் வழியில் ரசாயன நிகழ்ச்சிகள் தடைபெற ரசாயன நூலார் அமிலங்களையும், காரணங்களையும் பயன்படுத்துகிறார்கள். வெப்பத்தையும், அழுத்தத்தையும் கையாளுகிறார்கள். பலவகையான ரசாயன நிகழ்ச்சிகள் நடைபெறுமாறு செய்ய ரசாயன நூலார் எத்தனையோ முறைகளைக் கையாளுகிறார்கள். இயற்கையில் இத்தகைய சக்திவாய்ந்த முறைகள் காணப் படவில்லை. உடலின் வெப்பம் குறைவு மிகவும் மந்தமாகவே