பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

35




நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆயினும் உயிருள்ளனவற்றின் உறுப்புகளிலும், உடல்களிலும், பலவகையான, மிகவும் சிக்கலான ரசாயன நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றனஇவ்வாறு பலவகையான சிக்கலான நிகழ்ச்சிகள் தாவரங்களினுள்ளும், உயிருள்ளனவற்றின் உடல்களிலும் நடைபெறுவதைக் கண்டுதான், உயிரணுக்களின் (cell) உள்ளே இம்மாறுபாடுகள் நடைபெறுகின்றன என்ற முடிவுக்கு விஞ்ஞான நூலார் வந்தனர். இது உண்மையல்லவென்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆயிரக்கணக்கான சிக்கலான பொருள்கள் உயிருள்ளனவற்றினுள் காணப்பட்ட போதிலும் இவையனைத்தும் சிறுசிறு நிகழ்ச்சிகளின் காரணமாகத் தோன்றியவை என்பதில் சந்தேகமில்லை. உயிரணுக்களின் உள் நிகழும் மாறுதல்கள் மூலவகையானவை. ஒன்று, சுருக்கம்: கரி அணுத்தொடர் நீளமாவதும், குறுகுவதும். இரண்டு, கூட்டு: பல சேதன அணுக்கூட்டுகள் ஒன்றுசேர்ந்து ஒரே அணுக்கூட்டு ஆவது, அல்லது இடையே நைட்ரஜன் அல்லது ஆக்ஸிஜன் அணுவால் சேதனக் கூட்டணுக்கள் பாலம்போல் பிணைக்கப்படுவது. சிக்கலான அணுபிரிக்கப்படுவதும் இதனுள் அடங்கும். மூன்று இட மாற்றம்: ஒர் அணுக்கூட்டிலிருந்து மற்றொன்றுக்கு பாஸ்வாரிக் அமிலம், அமினோ நைட்ரஜன், மீதேன் முதலிய அணுச்சேர்க்கை மாற்றப்படுவது. பல சேதனப் பொருள்களைத் தோற்றுவிக்கும் (உயிருள்ளன வற்றில் நடைபெறும்) ரசாயன மாறுபாடுகள் அனைத்தும் இம்மூன்று அடிப்படை நிகழ்ச்சிகளாலேயே ஏற்படுகின்றன. செடிகளில் நீராவி வெளியேறுவது, விலங்குகள் சுவாசிப்பது, பொருள்கள் புசிப்பது, சீரணம், புதுப்பொருள்கள் உண்டாவது இவை யாவற்றையும் இம்மூன்று வகையான நிகழ்ச்சிகளின்பால் படுத்தலாம். எதன்பின் எந்த மாறுதல் நடக்கிறது என்பதைப் பொறுத்து எந்தப் பொருள் உண்டாகும் என்பது நிர்ணயமாகும். 'கூட்டு முதலிலும், சுருக்கம், பின்புறம், இடமாற்றம் அதற்குப் பின்பும் நிகழ்ந்தால் ஒருவகையான பொருள் உண்டாகும்.