பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

37


அணு ஆக்ஸிஜனும், இரு அணுக்கள் நீரகமும், இரு அணுக்கள் கரியும் உள்ளன). சுண்ணாம்புத் தெளிவில் ஊற்றி, வெப்பமான இடத்தில் வைத்திருந்தால் இனிப்பான ஒரு பொருளாக மாறுகிறது என்பதை A.M. பட்லேராப் செய்து காட்டினார். அதைத் தொடர்ந்து பார்மலின் ஆறு அணுக்கூட்டுகள் இணைந்து சர்க்கரையாக மாறுகின்றன என்று ரசாயனிகள் நிரூபித்துள்ளார்கள். பார்மலின் என்ற சுலபமான அமைப்புள்ள அணுக்கூட்டுள்ள பொருளிலிருந்து அதைவிட அதிக எண்ணிக்கைக் கொண்டதும், சிக்கலான அமைப்புடையதுமான சர்க்கரை அணுக்கூட்டுகள் உண்டாகின்றன. A.N. பாச் என்ற சோவியத் உயிர் இயல் ரசாயனி (சோவியத் நாட்டில் விஞ்ஞானத்தில் இப்பிரிவின் ஆரம்ப கர்த்தா இவர்தான்) பார்மலின் கரைசலை, பொட்டாசியம் சையனைடு என்ற உப்பின் கரைசலோடு சேர்த்து நீண்டநாள் வைத்திருந்தால் பார்மலினைவிட அணுக்கூட்டு எடை அதிகமுடையதான நைட்ரஜன் கூட்டுப்பொருள் உண்டாவதைக் கண்டார். அதன் அணுக்கூட்டு எடை பார்மலினின் அணுக்கூட்டு எடையைவிட அதிகம். அதன் பண்புகள் புரதத்தின் பண்புகளை ஒத்திருந்தன. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை இங்கே வருணிக்க முடியும். சில அணுக்களைக் கொண்ட சேதனப் பொருள்களின் கூட்டணுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும் போது சாதாரண நிலைமைகளில் பல அணுக்களைக் கொண்ட கூட்டணுக்களுள்ளனவும், அணுக்கூட்டு எடை அதிகமாகவும் உள்ள பொருள்களை உண்டாக்குகின்றன என்பதை விளக்க இவ்வுதாரணங்களே போதும். ஆய்வுகூடத்தின் நீரின் நிலைமைகளும், (புராதனக் கடல்களில் இருந்த நீரின் நிலைமைகளும்) ஏறக்குறைய ஒத்திருந்தன. ஆகவே கடலில் பலபகுதிகளிலும், தண்ணீர் வற்றுகிற குட்டங்களிலும், பட்லரேவும், பாக்கும் தங்கள் சோதனைச் சாலைகளில் கண்ட மாறுதல்களனைத்தும் நிகழ்ந்திருக்கவேண்டும்.