பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

உயிரின் தோற்றம்


புராதனக் கடல்களில் பல சேதனப் பொருள்கள் கரைந்திருந்தன. அங்கே ரசாயன நிகழ்ச்சிகள் சோதனை சாலையில் வரிசையாக நடைபெறுவதுபோல இல்லாமல் குழப்பமாகப் பல வகைகளில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதி. ஒரே சமயத்தில் சேதனப்பொருள்கள் பல்வேறு வகையான மாறுதல்களையடைந்து பல்வேறு பொருள்களைத் தோற்றுவித்தன. ஆனால் ஆரம்பத்திலிருந்து எளிய அமைப்புடைய பொருள்களிலிருந்து சிக்கலான அமைப்புடைய பொருள்கள் தோன்றும்முறையிலேயே மாறுதல்கள் நடைபெற்றன. இதன் காரணமாக வெப்பமான புராதன சமுத்திரத்தில் இன்று தாவரங்களிலும், விலங்குகளின் உறுப்புகளிலும் காணப்படும் பொருள்களை ஒத்திருக்கும் பொருள்கள் தோன்றின. புராதனக் கடல்களில் சிக்கலான அமைப்புடைய சேதனப் பொருள்கள் தோன்றிய விதத்தை நாம் ஆராயும் போது, அந்நிலைமைகளில் புரதப்பொருள்கள் தோன்றிய விதத்தைக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். உயிர்ப் பொருளைத் தோற்றுவிப்பதில் புரதங்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. பிராணிகளிலும், தாவரங்களிலும், நுண்ணுயிர்களிலும் காணப்படும் புரோடோபிளாஸம் இப்பொருள்கள் பற்றிய விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் காண்க) என்னும் பொருளில் புரதங்கள் மிகுதியாக உள்ளன. இதை முதன் முதலில், டுரிங்குக்கு மறுப்பு (Antiduhring) என்ற நூலில் ஏங்கெல்ஸ் தெளிவாக்கினார். “உயிர்காணப்படும் இடத்தில் எல்லாம், புரதப் பொருள்கள் காணப்படுகின்றன. புரதப்பொருள் சிதைந்து மூலங்களாகப் பிரியாமல் காணப்படும் இடத்தில் எல்லாம் உயிரும் காணப்படுகிறது.” ஏங்கெல்ஸின் கருத்து உண்மைதான் என்பதை இன்றைய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. புரதங்கள் புரோட்டோ பிளாஸ்த்தை உண்டாக்கும் சடப்பொருள் மட்டுமல்ல; ஜீரண நிகழ்ச்சிகளிலும் மற்றும் உடலில் நிகழும் மாறுதல்களிலும் அதற்குப் பங்கு உண்டு என்று