பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உயிரின்தோற்றம்


உண்டாகும் புரதங்களில் (மாமிசம், மீன், பருப்பு முதலியவற்றில் காணப்படுவது) முப்பதுக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளனவென்று தெரிய வருகிறது. சில புரதங்களின் கூட்டணுக்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அமினோ அமிலங்களே உள்ளன. இன்னும் சிலவற்றில் சில அமினோ அமிலங்களே உள்ளன. நமக்குத் தெரிந்த எல்லா புரதங்களின் பண்புகளும், அவற்றிலுள்ள அமினோ அமிலங்களின் தன்மைகளைப் பொறுத்த ஒவ்வொரு புரதத்திலும் உள்ள தொடரிலும் அமினோ அமிலங்கள் குறிப்பிட்ட முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இவ்விணைப்பு முறையைப் பொறுத்தே அதன் பண்புகள் இருக்கும். ஒவ்வொரு புரதத்தின் பெளதீக ரசாயனப் பண்புகள். (உ.ம். அதன் கரையும் திறன், வேறு பொருளோடு கூட்டுச் சேருவது அல்லது பிரிவது முதலிய பண்புகள்) புரதக் கூட்டணுவிலுள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கையை மட்டுமல்லாமல் அவை தொடராக இணைக்கப்பட்டுள்ள முறையையும் பொறுத்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான வகையான புரதங்கள் இத்தகைய இணைப்புகளால் உண்டாகின்றன. முட்டையிலுள்ள வெள்ளைக் கரு சுலபமான அமைப்புள்ள ஒரு புரதத்துக்கு உதாரணம். நமது உடலிலுள்ள இரத்தம், தசை, மூளை முதலியவற்றில் காணப்படும் புரதங்களின் அமைப்பு அதைவிடச் சிக்கலானது. எல்லா உயிருள்ளனவற்றின் உடல்களிலும், உறுப்புகளிலும் ஆயிரக்கணக்கான வகையான புரதங்கள் உள்ளன. ஒவ்வொரு தாவரத்திலும், விலங்கினத்திலும் குறிப்பிட்ட வகையான புரதங்கள் உள்ளன. உதாரணமாக குதிரை, காளை, முயல் இவற்றின் இரத்தத்திலுள்ள புரதமும், மனித இரத்தத்திலுள்ள புரதமும் ஒன்றல்ல. இவை வேறு வேறானவை. புரதங்களில் இவ்வாறு ஆயிரக்கணக்கான விதங்கள் இருப்பதால் அவற்றை செயற்கைமுறையில் தயாரிப்பது மிகவும் கடினம். அந்த அமினோ அமிலத்தையும் கரிநீரகப் பொருள் களையும், அம்மோனியாவையும் ரசாயனச் சேர்க்கையடையச்