பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

41


செய்து பெறலாம். பல அமினோ அமிலங்களை ரசாயன முறையில் இணையுமாறு செய்து புரதங்களைப் போன்ற பொருள்களைப் பெறுவதும் எளிது. ஆனால் இயற்கையில் கிடைக்கும் புரதங்களைப் (உ.ம் : இரத்தத்தில் உள்ளது அல்லது பட்டாணிக் கடலையில் உள்ளது) பெற இவை மட்டும் போதா. ஒரு குறிப்பிட்ட புரதத்தைப் பெற, அப்புரதக் கூட்டணியில் அமினோ அமிலங்கள் எம்முறையில் இணைக்கப் பட்டுள்ளனவோ, அம்முறையில் அவற்றை இணைக்க வேண்டும். இதுதான் மிகவும் கடினமான காரியம். இருபது அமினோ அமிலங்கள் : அவற்றுள் ஒவ்வொன்றிலும் 50 தொடர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இத்தொடர்களிலுள்ள இணைப்புகளை மாற்றி ஆயிரக்கணக்கான புதிய தொடர்களைப் பெறமுடியும். இவ்வாறு பெறக்கூடிய தொடர்களின் எண்ணிக்கை பலநூறு கோடிகளுக்கும் மேலாகும். சரியாகச் சொல்வதானால் 1 எழுதி அதன் பின் நாற்பத்தெட்டு பூஜ்யங்களை எழுதினால் எவ்வளவோ, அதுதான் தொடர்களின் எண்ணிக்கையாகும். நமது விரலின் பருமனாக இப்புரதக் கூட்டணித் தொடர்களை ஒரு கயிறாக்கினால், அக்கயிற்றைக் கொண்டு எல்லா நட்சத்திரங்களையும் இணைக்க முடியும். மேற்கண்ட உதாரணத்தில் 20 அமினோ அமிலங்களும் 50 தொடர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டோம். ஆனால் உண்மையில் ஒவ்வொரு புரதத்திலும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தொடர்களும் சுமார் 30 அமினோ அமிலங்களும் உள்ளன. அப்படியானால் எத்தனை வகையான புரதங்கள் உண்டாக முடியுமென்று எண்ணிப்பாருங்கள். மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட இன்னும் பன்மடங்கு அதிகமானவை இருக்க முடியுமல்லவா? இயற்கையில் கிடைக்கும் ஒரு புரதத்தை செயற்கை முறையில் பெறுவதற்கு, அமினோ அமிலங்களை இணைக்கக் கூடிய ஆயிரக்கணக்கான முறைகளில் ஒரு குறிப்பிட்ட முறையை நாம் தெரிந்தெடுக்க வேண்டும். அந்த இணைப்பு அந்தப் புரதத்திலுள்ள தொடரின் அமைப்பாக இருக்க