பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

உயிரின்தோற்றம்


இரண்டாவது, அவற்றினுள் பெளதிக மாறுபாடுகளும் ரசாயன மாறுபாடுகளும், ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒழுங்காகவும், குறிப்பிட்ட ரசாயன விதிகளுக்குட்பட்டும் நிகழ்கின்றன. தற்காலத்தில் உயிருள்ளவற்றிற்குத் தனி உருவமும், சிக்கலான உள்ளமைப்பும், இணைப்பும் இருப்பதைக் காண்கிறோம். இத்தகைய உயிருள்ளவை புராதன சமுத்திரங்களில் காணப்படாதது இயற்கையே. புராதன சமுத்திரத்தின் சரித்திரத்தை சென்ற அத்தியாயத்தில் கண்டோம். சேதனப் பொருள்கள் நீரில் கரைந்திருக்கும்போது அவற்றின் கூட்டணுக்கள், கரைசலின் பரிமாணம் முழுவதிலும் வியாபித்து, ஒழுங்கற்ற முறையில் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. இவ்வகையில் அவை பிரிக்க முடியாதபடி சூழ்நிலையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. கூட்டணுக்கள் ஒழுங்கான முறையில் இணைக்கப்படாததால் அவற்றிற்கு அமைப்பு எதுவும் இல்லை. சூழ்நிலையினின்றும் பிரித்தறிய முடியாதபடி அவை அதனோடு ஒன்றியிருக்கின்றன. சூழ்நிலையினின்றும் பிரிக்க முடியாத சிறப்பான அமைப்பு எதுவுமில்லாத உயிருள்ளது எதுவும் இல்லை என்பதை நாமறிவோம். சேதனப் பொருள்கள் உயிருள்ளனவாக மாறும் முன்னர் சூழ்நிலையிலிருந்து பிரியக்கூடிய, உள்ளமைப்புள்ள தனிப்பொருள்கள் தோன்றியிருக்க வேண்டும்.

குறைந்த கூட்டணு எடையுள்ள சர்க்கரை அல்லது மது சாரம் தண்ணீரில் கரைந்தவுடன் மிகச் சிறிய துணுக்குகளாகப் பிரிந்துவிடுகின்றன. கரைசலில் கூட்டணுப் பிரமாணமாக, எல்லாப் பகுதிகளிலும் அது சமமாக வியாபித்திருக்கிறது. கூட்டணுக்கள் தம்முள் இணைப்பின்றிச் சுதந்திரமாக இயங்குகின்றன. இக்கரைசல்களின் பண்புகள் கரைந்திருக்கும் பொருள்களின் கூட்டணுக்களின் தன்மையைப் பொறுத்தவையே. அதாவது கூட்டணுக்களில் அணுக்கள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனவோ, அதனைப் பொறுத்தது. கூட்டணுக்கள் உருவத்தில் பெரிதானால், புதிய பண்புகள் அவற்றிற்கு உண்டாகின்றன. அவற்றைப் பற்றி ஆராயும் நூலுக்கு 'கலாய்டல் கெமிஸ்ட்ரி என்று பெயர். சீனி போன்ற