பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

47


குறைந்த கூட்டணு எடையுள்ள பொருள்கள் கரைந்திருக்கும் பொழுது எல்லாவிடங்களிலும் சமமாக வியாபித்திருக்கின்றன. சிதையாமல் நிலைத்திருக்கின்றன. இதற்கு மாறாக உயர்ந்த அணுக்கூட்டு எடையுள்ள பொருள்கள் அவ்வாறில்லாமல் கொழுகொழுவென்ற சிறு திவலைகளாகக் கரைசலினின்று வெளிவந்துவிடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இத்திவலைகள் ஒன்றுகூடி சிக்கலான அமைப்புடைய துணுக்குகளாகின்றன. அவை வெளிவரும் நிகழ்ச்சிக்கு இணைந்து பிரிதல்” (coagulation) என்று பெயர். சில சந்தர்ப்பங்களில் இவை வீழ்படிவாக வெளிவருவதில்லை. ஆயினும் கூட்டணுக்கள் சமமாக வியாபித்திருந்த நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் கரைந்திருக்கும் சேதனப் பொருள்களின் கூட்டணுக்கள் கூடி புதிய சிக்கலான அமைப்புள்ள பொருள்களைத் தோற்றுவிக்கின்றன. இப்பொருள்களின் தன்மைகள், கூட்டணுக்களின் பண்புகளை மட்டுமல்லாமல், அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் பொறுத்திருக்கும். உதாரணமாக ஜிலாட்டின் அல்லது கோந்து போன்ற வஸ்துவின் கரைசலை எடுத்துக்கொள்ளலாம். பார்வைக்கு கரைசலுள் ஒன்றுபட்டும் ஒளி புகக்கூடியதாகவும் அவை தோன்றுகின்றன. சூழ்நிலையோடு இப்பொருள்கள் ஒன்றியே காணப்படுகின்றன. ஆனால் அதனை இரண்டு பாத்திரங்களில் எடுத்து ஒன்று சேர்த்தால், கலவை தெளிவிழந்து மங்கலாகும். சிறியனவற்றைப் பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ்கோப் பின் வழியே அவற்றைப் பார்த்தால் அவை கரைசலுக்கு வெளியே தனித்துளிகளாகப் பிரிந்து வந்திருப்பதைக் காணலாம். இதைப்போலவே நீரில் கரைந்திருக்கும், உயர்ந்த கூட்டணு எடையுள்ள புரதங்களும் பிரிந்து வருவதைக் காணலாம். அக் கரைசல்களை ஒன்று சேர்த்தால் தயிர் போலப் புரதம் கரைசலினின்றும் சிலவிடங்களில் பிரிந்து வருவதைக் காணலாம். இத்துளிகளை"கோயசர்வேட்” என்று அழைக்கிறோம். (லத்தீன் மொழியில் இதன் பொருள் கூடக்குவிவது என்பது) பல ஆய்வுக்கூடங்களில் இதுபோன்ற சோதனைகள் நிகழ்த்தி


  • கரையாத பொருள் ஒரு கரைசலில் உண்டானால் அது கரைசலிலிருந்து வெளிப்படும் உருவத்துக்கு வீழ்படிவம் என்று பெயர்.