பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

49


விடும். அப்புறம் தண்ணின் மேற்பரப்பிலுள்ள ‘நிலை மின்சார’ சக்திக்கு ஏற்றவாறு வேறு இணைப்பு தோன்றும். சில வேளைகளில் சக்தி மாறுதல்களின் காரணமாக கோயசர்வேட் சிதைந்து கூட்டணுக்களாகப் பிரிந்து விடுதலும் உண்டு. அப்படிச்சிதைந்தால் அவை கூட்டணுக்களாகி நீரோடு கலந்து

ஒன்றியிருக்கும். வடிவமிழந்து விடும். சில வேளைகளில் கோயசர்வேட், திரவ நிலையினின்றும், திடநிலைப் பொருளாக மாறி மேலும் சிக்கலான அமைப்புப் பெற்று ஸ்திரமானதாக மாறிவிடும். இம் மாறுதல்களுக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அவற்றினுள் நிகழும் இரசாயன மாறுதல்கள். மற்றொன்று சூழ்நிலையில் நிகழும் மாறுதல்கள். முதன்முதலில் பிரிந்து தனித்து நிற்கும் இணைப்பு முறையை, ஆரம்ப கட்டத்தில் இப்பொருள்களிடம் காண்கிறோம். இவ்விணைப்புதான், கோயசர்வேட்டுகளின் பல ஆச்சரியமான தன்மைகளனைத்தையும் நிர்ணயிக்கிறது. இக்-