பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உயிரின் தோற்றம்


கோயசர்வேட் துளிகள் தங்கள் பக்கத்திலிருக்கும் கரை பொருள்களைக் கரைசலினின்றும் உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தவை. பல சாயங்களை கரைசலில் சேர்த்தால், அவற்றினுள்ளிருக்கும் கோயசர்வேட்டுத் துளிகளும் அந்நிறமடைவதைக் காணலாம்.

கோயசர்வேட்துளியினுள் ரசாயன மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அத்துளிகளால் பாதிக்கச் செய்யும். அதன் விளைவாக இம்மாறுதல்களைப் பாதிக்கச் செய்யும். அதன் விளைவாகதுளிகள் பெரிதாகலாம். எடையில் கூடலாம். ரசாயன அமைப்பிலும் மாறுதல் அடையலாம். புதிய ரசாயன மாறுதல்கள் அவற்றினுள் நிகழலாம். எத்தகைய மாறுதல்கள் நடக்கும், எவ்வளவு வேகத்தில் நடக்கும் என்பவை இத்துளிகள் பெளதீக-ரசாயன அமைப்பைப் பொறுத்தவை. பலவகையான துளிகளில் இவை பல்வேறு விதமாக இருக்கும்.

கோயசர்வேட்டுகளின் பண்புகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்னர் நாம் புராதன உலகத்தின் மேற்பர்ப்பில்