பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

55


புரோட்டோபிளாசத்தையும் அதன் அமைப்பையும் இயந்திரத்தின் அசைவு நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுகிறார்கள். இவற்றிடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. இயந்திரத்திலுள்ள பகுதிகளின் இடை வெளியமைப்பைப் போலத்தான், புரோட்டோபிளாசத்தின் அமைப்பும் என்று அவர்கள் கருதுகிறார்கள். முன்கூறியதுபோல இடைவெளி மட்டுமல்லாமல் காலத்தையும் கருதி அமைப்பை மனதில் கொள்ளவேண்டும். உதாரணமாக ஒரு பொதுக் கூட்டம் என்றால், கேட்பவர்களெல்லாம் வரிசையாக அமர்வது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக் குறிப்பைப் பின்பற்றி முன், பின்னாக பேச்சுகள் அமைவதும் முக்கியமல்லவா?

இயந்திரத்தைப் பொறுத்தவரை இடைவெளியில் பகுதிகள் பொருத்தப்படுவதே மிகவும் முக்கியமானது. ஆனால் சங்கீதத்தில் காலம் முக்கியமானது. காலத்தில் கூடுதல் குறைதல் இன்றி ஒரு குறிப்பிட்ட வகையில் ஒலிகள் இணைந்தால்தான் அது இசையாகும். சிறிதளவு கால அளவு மாறினும், இசையின் இனிமை கெட்டுபோகும். இவ்வாறு ஒவ்வொரு அமைப்பிலும் இடைவெளி அல்லது அமைப்பு முக்கியத்துவமடைகிறது.

சிக்கலான உள்ளமைப்பு புரோட்டோபிளாசத்தின் அமைப்பில் முக்கியமானதுதான். ஆனால் புரோட்டோபிளாசத்திலுள்ள நிகழ்ச்சிகளின் முன்பின் வரிசையும், ரசாயன நிகழ்ச்சிகளின் முழுமையான விளைவுகளுமே அதைவிட முக்கியமானது. தாவரம், காய்கறி, நுண்ணுயிர் ஆகிய எந்த உயிருள்ளதும், புதிய துணுக்குகளை சூழலினின்றும் பெற்ற, தன்னுள்ளிருந்து வெளிவிடும்வரைதான் உயிரோடிருக்கிறது. இப்பொருள் மாற்றத்தோடு சேர்ந்து சக்திமாற்றமும் நிகழ்கிறது. சூழலினின்றும் பல்வேறு கூட்டுப் பொருள்கள் உயிருள்ளனவற்றினுள் நுழைகின்றன. அவை அதனுள் பல மாறுதல்களடைகின்றன. உயிருள்ளனவற்றின் உடலில் என்ன பொருள்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றனவோ, அப்பொருள்களாக அவை மாறுகின்றன. இதற்குத்தான் ‘சீரணம்’ என்று பெயர். இதனோடு