பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

57


நிகழ்ச்சிகள்தான் பிராணிகளின் உடலில் நிலைத்திருக்கும் தன்மையை ஏற்படுத்துகின்றன.

சீரணம் அல்லது உயிரினுள் நிகழும் கூட்டு மாறுதல்கள் எளிதான சிறு மாறுபாடுகளே. அவையாவன: பிராணவாயு வோடு கூடுதல், (Oxidation), குறைதல் (Reduction), நீரோடு சேர்ந்து நிகழும் இரட்டைச் சிதைவு (hydrolzis), சுருக்கம் (consdensation), (இது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது) புரோட்டோபிளாசத்தின் சிறப்பான தன்மையென்னவெனில், இம்மாறுதல்கள் யாவும் குழப்பமான வகையில் நிகழாமல் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் நிகழ்கின்றன.

நமக்குத் தெரிந்த எல்லா உயிர்களிலும் இத்தகைய ஒழுங்குமுறையே உயிருக்கு ஆதாரமாக உள்ளதாகக் காணப்படுகிறது. உதாரணமாக சர்க்கரையோடு ‘யீஸ்ட்’ (yeast) என்ற நுண்ணுயிர்களைச் சேர்த்தால் சர்க்கரை, அவ்வுயிர்ப் பிராணிகளுள் நுழைந்து, அவற்றினுள் வரிசையாகப் பல மாறுதல்களையடைந்து கடைசியில் மதுசாரமாகவும், கரியமில வாயுவாகவும் மாறுகிறது. இம் மாறுதல்களின் வரிசையை எதிர்புறம் குறியீட்டுப் பட்டியலில் காண்க.

குறிப்புப் படத்தில் காட்டியபடி யீஸ்ட் ஜீவ அணுக்களில் மாறுதல்கள் நடக்கின்றன. இத்தொடரில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி விட்டுப்போயினும், அல்லது நிகழும் வரிசையை மாற்றினாலும் முடிவில் மதுசாரம் விளைவுப் பொருளாகக் கிடைக்காது. உதாரணமாக லாக்டிக் அமில நுண்ணுயிர்கள் சர்க்கரையை வேறு விதத்தில் மாற்றிக் கடைசியில் லாக்டிக் அமிலம் என்னும் புளிக்கும் வஸ்துவை அளிக்கின்றன.

புரோட்டோ பிளாசத்தில் உண்டாகும். பலவகைப் பொருள்கள் உண்டாகும் விதத்தை ஆராய்ந்து அவை உடனடியாக உண்டாகாமல், பல தொடர்ச்சியான ரசாயன வினைகளின் விளைவாக உண்டாவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட பொருளை ஜீவ அணுக்கள் தம்முள் உண்டாக்க