பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

59


நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான சுலபமான மாறுதல்கள் நடக்க வேண்டும். அவை மேலே விளக்கியுள்ளபடி வரிசையாகவும் குறிப்பிட்ட ரசாயன விதிகளுக்குட்பட்டும் நிகழ்கின்றன. இந்த வரிசையும், ஒழுங்குமே புரோட்டோபிளாசம் நிலைகொள்வதற்குக் காரணமாகும்.

கூட்டுப் பொருள், எவ்வளவுக்கெவ்வளவு சிக்கலான அமைப்புடையதோ, அவ்வளவுக்கவ்வளவு எண்ணிக்கையில் அதிகமான ரசயான நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை வரிசையாகவும், ஒழுங்காகவும் இணைக்கப்பட்டிருக்கும் அமினோ அமிலங்களினின்றும், புரதங்கள் தயாரிக்கப் பல தனித்தனியான வரிசையான நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும். உயிருள்ள புரோட்டோபிளாசம், அமினோ அமிலங்களின் ஒழுங்கான அமைப்பு காரணமாகவும் அவற்றின் ரசாயன நிகழ்ச்சித் தொடரில் மிகவும் நிர்ணயமான பரஸ்பரத் தொடர்பும், முன்பின் வரிசையுமிருப்பதாலும், சிறந்த அமைப்புடையதாகிறது.

இம்முறையில் தோன்றுகிற, புரதத்துணுக்குகள் ஒன்றுகூடி பெரிய அணுக்கூட்டுத் தொகுப்புகளாகின்றன. பின்பு அவை புரோட்டோபிளாசத்தின் கூட்டணியில் இருந்து வேறாகி வீழ்படிவாக வெளிவருகின்றன. இத்தொகுப்புகளை மைக்ராஸ் கோப் என்ற கருவியின் மூலம் காணலாம். இவை தாமே விரைவாக இயங்கக்கூடியவை. புரோட்டோபிளாசத்தின் அமைப்புடையவை. புரோட்டோபிளாசத்தின் ரசாயன அமைப்பும் அதன் உள்ளமைப்பும், உயிருள்ளவைகளுள் நிகழும் ரசாயன மாறுதல்களின் வரிசையைப் பொறுத்த ஒரு தோற்றமே.

புரோட்டோபிளாசத்தின் அமைப்பின் சிறப்பான தன்மையை நிர்ணயிக்கும் காரணம் எது? அவ்வமைப்பின் ஒழுங்கிற்குக் காரணமாயுள்ள சக்தி எது? பொருளுக்கு வெளியே, அத்துடன் தொடர்பற்ற ஏதோ ஒரு சக்திதான் காரணம் என்று கருத்துமுதல் வாதிகள் கருதுவது