பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உயிரின்தோற்றம்


பொருளில் உள்ள சேதனப் பொருளை வேறொரு பொருளாக மாற்றிவிட்டு என்லைம் மீண்டும் தன்னியற்கையான தன்மையைப் பெறுகிறது. மேலும் மேலும் சேதனப் பொருள் களை அது இத்திசையில் மாறுதலடைய ஊக்குவிக்கிறது.

புரோட்டோ பிளாசத்திலுள்ள எப்பொருளும் இம்மாறுதல்களில் கலந்துகொள்ள புரதத்தோடு சேர்ந்து சிக்கலான பொருளாகவேண்டிய அவசியம். அவ்வாறு மாறாவிட்டால் உயிர் நிகழ்ச்சிகள் மிகவும் மெதுவாக நடைபெறும். உயிர் நடவடிக்கைகள் தேக்கமடையும். இதனால்தான் உடலினுள் நிகழும் நிகழ்ச்சிகளின்போது சேதனப் பொருள்கள் மாற்றமடைவது அவைகளின் அணுக்கூட்டு அமைப்பையும், ரசாயனக் கூட்டுத் திறனையும் மட்டுமல்லாமல் எப்படி மாற்றப்படுகின்றன என்பதையும் பொறுத்திருக்கிறது. அவைதான் உடலினுள் சேதனப் பொருள்கள் சீரணமாகி உடலோடு இணைவதற்கு உதவுகின்றன.

என்ஸைம்கள் உயிர்ப் பொருள்களில் ரசாயன மாறுபாடுகள் விரைவாக நடப்பதற்கு உதவுகின்றன. அது மட்டுமில்லாமல் அம்மாறுபாடுகள் ஒரு குறிப்பிட்ட திசையில் நிகழ்வதற்குத் தேவையான சாதனத்தையும் அளிக்கின்றன. ஒவ்வொரு என்ஸைமும் ஒரு குறிப்பிட்ட் பொருளை ஒரு குறிப்பிட்ட மாறுதலடைவதற்குத்தான் உதவும். ஆகவே உயிருள்ள பிராணிகளின் உடலில் நிகழும் மாறுதல்களில் (அவை ஆக்க மாறுதலாயினும் சரி, அழி மாறுதலாயினும் சரி) ஆயிரக்கணக்கான புரதப் பொருள்களும், என்ஸைம்களும் பங்கு கொள்கின்றன. ஒவ்வொரு என்ஸைமும் ஒரு குறிப்பிட்ட மாறுதலைத் துண்டிவிடுகின்றன. ஆயிரக்கணக்கான என்ஸைம்கள் கூட்டாக இத்தகைய தனித்தனி மாறுதல்களைத் தூண்டும் பொழுது ஓர் இணைப்பு ஏற்பட்டு, ஒழுங்கான முறையில் மாறுதல்கள் நிகழ்கின்றன. உயிர்ப் பிராணிகளின் உடலில் நிகழும் ரசாயன மாறுபாடுகளின் அடிப்படை இதுவே.

உயிருள்ளனவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தனித்தனி என்ஸைம்கள், ஆய்வுக் கூடத்திலேயே உடலுள் தோன்றும் உயிர்