பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

63


ரசாயன மாறுதல்களைப்போன்ற மாறுதல்களைத் தோற்றுவிக்க வல்லன. ஆயிரக்கணக்கான தனித்தனியான நிகழ்ச்சிகளின் தொகுப்பான உடலில் நிகழும் மாறுபாடுகளின் சிக்கலை விடுவித்து உண்மையை அறிய இச்சோதனைகள் உதவுகின்றன. இவ்வழியில், உயிர் மாறுதல்களை பல ரசாயனக் கட்டங்களாகப் பிரித்து உயிர்பொருள்களை மட்டுமில்லாமல், ரசாயன முறைகளையும் அறிந்துகொள்ளலாம். இம் முறைகளைப் பின்பற்றி A.N. பாக், V.I. பல்லாடின் ஆகிய விஞ்ஞானிகளும், அவர்களைப் பின்பற்றிப் பிற விஞ்ஞானிகளும் உயிர்களுக்கே ‘மூச்சுவிடும்’ (சுவாசிக்கும்) செயல் ஆக்சிஜன் அதிகரித்தல், குறைதல் போன்ற தொடர்ச்சியான மாறுதல்களின் அடிப்படையில் நடக்கிறது என்று விளக்கினார்கள். (மாவு அல்லது சர்க்கரை புளித்து மதுவாக மாறுவதும் இத்தகைய வரிசையான ரசாயன மாறுதல்களே என்ற எஸ்.பி. காஸ்டிசேவ், எல்.என். லிபிடேவ் போன்ற விஞ்ஞானிகள் நிரூபித்தனர்.

உயிர் நிகழ்ச்சிகளைப் பிரித்து ஆராய்வதிலிருந்து அவற்றை சேர்த்தல் முறையில் நிகழவைப்பது சாத்தியமா என்ற ஆராய்ச்சியில் இறங்கலாம். உதாரணமாக உயிர்ப் பொருள்களிலிருந்து பெறப்பட்ட குறிப்பிட்ட அமைப்பையுடைய 2 டஜன் வேறு வகையான என்ஸைம்களைத் தண்ணீரில் கரைத்து மதுசாரம் உண்டாகும் போது ஏற்படும் ரசாயன மாறுதல்களை நாம் தோற்றுவிக்கலாம். இம்மாறுதலில் ஜீவ அணு எதுவும் இல்லா விட்டாலும் சர்க்கரையிலிருந்து, யீஸ்ட் என்ற ஜீவ அணுவின் செயலால் மதுசாரம் உண்டாகும்போது நிகழும் நிகழ்ச்சிகளுக்குள்ள விதிகள் யாவும் செயல்படுகின்றன.

‘என்ஸைம்’ கலவையில் சேர்ந்துள்ள பொருள்களைப் பொறுத்து, மாறுதல் நிகழ்கிறது. எடை அளவிலும் ரசாயன விதிமுறைகளின்படியே இவ் வினை ஊக்கி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல தூண்டுதல்களுக்கு எளிதில் உள்ளாகி மாறும் என்ஸைமின்தன்மையையும் அது பொறுத்திருக்கிறது. உதாரணமாக பெளதீக ரசாயன அம்சங்கள், சீதோஷ்ணநிலை, சேதனப் பொருள்கள், இவை யாவும் வினை ஊக்கி ― ரசாயன வினையின் தன்மையை மாற்றிவிட முடியும். உஷ்ணநிலை கூடுதல் அல்லது