பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தியாயம் 6
முதற் கட்டத்தில் தோன்றிய
உயிரினங்கள்

கடல்களிலும், சமுத்திரங்களிலும் முதன்முதல் தோன்றிய கோயசர்வேட் துளிகளுக்கு உயிரென்னும் பண்பு இல்லை. ஆனால் வளர்வதற்குத் தேவையான சூழ்நிலை இருந்ததால் ஆரம்பக்கட்ட உயிரினங்களாக மாறக்கூடிய தன்மை அவற்றுள் பொதிந்து கிடந்தன.

பொருள்களின் பரிணாமத்தில் முன்கட்டங்களிலும் இதே அம்சம் உண்டென்பதை முன் அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. வான இடைவெளியிலிருந்து கரி அணுக்கள் கரி நீரகப் பொருள்களாவும் கரியின் வழிப் பொருள்களாகவும் ஆகும். தன்மையுடையனவாகயிருந்தனவென்று முன்னர் கண்டோம். அவை, தம்முடைய அணுக்கூட்டின் ஒழுங்கான அமைப்பு, ரசாயனப் பண்புகள், இவை காரணமாக அணுக்கூட்டு எடை அதிகமாகவுள்ள பல பொருள்களாக உருவாகும் தன்மை கொண்டிருந்தன. புராதன சமுத்திரத்தில் உண்டான அத்தகைய பொருள்களில் புரதம் போன்ற பொருள்களும் இருந்தன. சிக்கலான கோயசர்வேட்டுகள் தோன்ற புரதங்கள் காரண மாயின. அவற்றின் அமைப்பு மேலும் சிக்கலாகி, அவற்றின்அணுக்கூட்டுகளில் பல ஒன்றுகூடி திரவ ரூபத்தில் நீரினின்றும் பிரிந்து வந்தன.

அவை மேலும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற இவ்வாறு அவை சூழலிலிருந்து குழம்பு போன்ற நிலையில் பிரிந்து வெளிவந்ததே காரணமாயிற்று. ஒரே சமயத்தில் இவ்வாறு