பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

உயிர் என்றால் என்ன?

இக்கேள்விக்கு இரண்டு விதமான விடைகள் இருக்கின்றன.

ஒன்று: உயிர் ஆன்மாவின் சலனம். தெய்வத்தன்மையுடையது. கடவுளின் ஒரு சிறு பொறி. அதனை அறியமுடியாது.

இவ் விடையை அளிப்பவர்கள், கருத்துமுதல்வாதிகள். பல மத கோட்பாடுகளும் கருத்துமுதல்வாத அடிப்படையில் எழுந்தவையே. அவர்களும் இத்தகைய விடையையே அளிக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக இவ்விடை சரியானதென்று அறிஞர்கள் நம்பிவந்தனர். பொருள்களின் மாற்றங்கள் குறித்து அன்று அறிவாளிகள்கூட அறிந்திருந்தது மிகவும் சொற்பமே.

ஆனால் விஞ்ஞானம் வளர்ச்சியுற்றிருக்கும் இன்று, இக்கேள்விக்கு மேற்கண்ட கேள்விக்கு இவ்விடையை எந்த உயிர் இயல்-விஞ்ஞானியும் அளிப்பதில்லை.

கருத்து முதல்வாதிகளின் கொள்கையை எதிர்த்து கடந்த நூறு வருஷங்களாக விஞ்ஞானம் போராடி வருகிறது. ஆராய்ச்சி முறையினால் அவர்களது கற்பனாவாதங்களை முறியடித்து வருகிறது. பொருள்களின் தன்மைகளைப் பற்றிய அறிவு நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. இவ்வறிவின் காரணமாக உயிரைப் பற்றிய நமது கருத்துகளும் தெளிவுபெற்று வருகின்றன.

“அணுக்கள் கூடுகின்றன. சிறுசிறு அளவில் அணுக்கள் கூடும்போது அளவுமாறுதல்கள் உண்டாகின்றன. பல அணுக்கள் கூடி ஒரு துணுக்கு உண்டாகும்பொழுது அதன்

vi