பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

74


தோற்றுவிக்க முடியும். முற்கூறிய நிபந்தனைகள் அமுலில் இருந்தால் மட்டுமே, சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப இவை தம்மை நிலைப்படுத்திக் கொள்ளமுடியும். குறிப்பிட்ட வாழ்க்கை நிலைமைகளில் எந்த மாறுதலும்துளியின் இயங்கு சமநிலையைக் கலைக்காமல் உறுதிப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கோயசர்வேட் துளி நிலைக்கும். இந்த சூழ்நிலையில்தான் இணைப்புடைய பொருள்களின் அளவு அதிகமாயின. கோயசர்வேட் அணிகள் வளர்ச்சியுறும் அதே சமயத்தில் ஒரு திசையில் அவற்றின் தன்மையைப் பொறுத்த மாறுதல்கள் நிகழ்ந்தன. அதாவது தானே நிலைத்தலும், தன்னைப் போன்றதொன்றை முழுமையாகத் தோற்றுவித்தலுமாகிய தன்மைகள் தோன்றின.

அதேசமயத்தில் துளிகள் நிலைக்கும் தன்மை அதிகப் படவே, அவற்றின் பரிணாமம் இவற்றின் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தி, இவற்றின் நிலைக்கும் தன்மையை வலிவுறச் செய்தன. கரைசலிலுள்ள எத்தனையோ சேதனப் பொருள்களின் துளிகளைவிட, கோயசர்வேட் துளிகள் இவ்வகையில் சிறப்பமைந்தவையாயின, ஆகவே அவை நிலைத்தன. வேறு சேதனப் பொருள்களின் துளிகளை அவை உட்கொண்டு வளர்ந்தன. ஆகவே, அவற்றின் முக்கியத்துவமும், அவற்றின் வழித்தோன்றல்களின் முக்கியத்துவமும் அதிகரித்தன.

சுலபமான அமைப்புடைய கோயசர்வேட் துளிகள் உலகிலிருந்து விரைவிலோ, மெதுவாகவோ, சிதைந்து மறைந்து விடும். சிதைந்தபின் உண்டாகும் பொருள்கள் கரைசலில் கலந்து விடும். இத்துளிகள் ஒரளவு ஸ்திரத் தன்மையுடைய வழித் தோன்றல்களை உண்டாக்கியிருந்தால் அவற்றினுள் நிகழும் ரசாயன மாறுதல்கள் விரைவாக நிகழ்ந்தாலன்றி அவையும் சிதைந்து மறைந்துவிடும். துளிகளினுள் விரைவாக ரசாயன மாறுதல்கள் நிகழ்ந்து, அவற்றில் ஓர் ஒழுங்கும், இணைப்பும் இருந்தால்தான் அத்துளிகள் நிலைக்கமுடியும்.

உயிருள்ள புரோட்டோபிளாசத்திலுள்ள ரசாயனமறுதல்களை ஊக்குவிக்கும் சாதனங்கள் என்ஸைம்கள் என்று ஐந்தாவது