பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமலை

73


அவற்றில் உடற்கூறு வேலைமுறைக்குமுள்ள தொடர்பு, இவையனைத்தும் வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப அவை தங்களை மாற்றிக் கொண்ட விளைவாக ஏற்பட்டவை என்பது நிச்சயம்.

சேதனப் பொருள்களும், முதலில் தோன்றிய துளிகளும், புராதனக் கடலினுள் மெதுவாக மாறுதலடைந்தன. அசேதன வினைஊக்கிகளே (இரும்பு, செம்பு, கால்சியம் உப்புகள்) மாறுதல்களைத் துரிதப்படுத்தின. இவை புராதனக் கடலில் இருந்தன என்பதில் ஐயமில்லை.

தனித்தனிச்சிறுதுளிகளில் இவ்வினைஊக்கிப் பொருள்கள் ஆயிரக்கணக்கான வகையில் கூடின. இக்கூட்டுப் பொருள் களில் சில ‘அதிர்ஷ்டமற்றவை’ யாயிருந்தன. அவற்றில் நிகழ்ந்த மாறுதல்கள் மெதுவாக நிகழ்ந்ததால் அவை அழிந்துபோயின. அவை உலகினின்றும் மறைந்தன. விரைவாக மாறுதலை நிகழ்த்தக் கூடிய சிக்கலான அமைப்புடையவை மட்டும் மேலும் வளர்ச்சியுற்றன.

மேலே வருணித்த பரிணாம முறையின் படி கரை பொருள்கள் கரைசலில் இரண்டறக் கலந்திருக்கும் போது, ரசாயன வினையை ஊக்குவதற்கு உதவியாக இருக்கும் அசேதனப் பொருள்கள் செயலிழந்தன. அவற்றிற்குப் பதில் சிக்கலான அமைப்புடைய என்ஸைம்கள் தோன்றின. அவை வினை ஊக்கித் திறனில் மிகவும் ஆற்றல் படைத்தவை என்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்டவினைக்கு மட்டுமே வினைஊக்கி சாதனமாகப் பயன்படும் என்பதால் மிகவும் பயனுள்ளவை. குறிப்பிட்ட குழம்பு போன்ற கரைசலில், ரசாயன வினை முறையை ஒரு திசையில் நிகழ்த்துவதற்கு இவ்வென்ஸைம்கள் மிகவும் உதவின.

என்ஸைம்கள் வினையை ஊக்கும் ஒவ்வொரு ரசாயன மாறுபாட்டிலும் ஓர் ஒழுங்கும், பரஸ்பரத் தொடர்பும் இருந்தால்தான், என்சைம்கள் வளர்ச்சியுற முடியும். ஒரு குழம்பு,