பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

77


தோன்றின. பலகோடி வருஷங்கள் நீடித்திருந்த இயோஸோயிக் - காலத்தில் புராதன சமுத்திரத்தில் வாழ்ந்த உயிரினங்களின் தொகை அதிகமாயிற்று முற்றிலும் மாறுபட்ட பலவகைப் பிராணிகளும் தோன்றின. மிகப்பெரிய ஆல்கே பூண்டுகள் கடலடியில் முளைத்தன. அவற்றின் ஊடே மெடுஸே, மொலஸ்கா, எகிம்டெர்ம், கடற்புழுக்கள் போன்ற பிராணிகள் தோன்றின. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பாலிஸோயிக் காலம் என்றழைக்கின்றனர். பல கோடி வருஷங்களுக்கு முன் இக்காலத்தில்) வாழ்ந்த உயிர்ப் பிராணிகளின் சடலங்களை கல்லிடைச் சின்னங்களில் காணலாம்.

ஐம்பது கோடி வருஷங்களுக்கு முன்புள்ள காலத்தை கேம்பிரியன்-காலம் என்பார்கள். அக்காலத்தில் உயிர்கள் கடல்களிலும், சமுத்திரங்களிலும்தான் வாழ்ந்தன. முதுகெலும்புள்ள விலங்குகள் (மீன், நீரிலும், நிலத்திலும் வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்குகள் முதலியன) அப்பொழுதில்லை. அதே போல் பூக்களுள்ள செடிகொடிகளோ, மரங்களோ இல்லை.)

தாவரங்களில் கடற்பாசிகள் மட்டுமேயிருந்தன. விலங்குகளில் மெடுஸே, பங்கி, அனிலிடா, டிரிலோபைட்ஸ் போன்றவை (முதுகெலும்பற்றவை) தானிருந்தன.

அடுத்த வளர்ச்சிக் காலத்துக்கு சிலூரியன் காலம் என்று பெயர். அக்காலத்தில் செடிகள் தோன்றின. முதல் முதுகெலும்புள்ள பிராணிகள் தோன்றின. இவையாவும் கடலில் தோன்றின. அவற்றின் உடல், எலும்பு போன்ற ஓட்டினால் மூடப்பட்டிருந்தது.

35 கோடி வருஷங்களுக்கு முன்பிருந்த காலத்தில் (டிவானியன் காலம் என்றழைக்கப்படும்) மீன்கள், கடல்களில் ஆழமற்ற இடங்களிலும், ஆறுகளிலும் தோன்றின. அவற்றை தாற்கால மகர மீன்களுக்கு தூரபந்துக்கள் என்று சொல்லலாம். தற்கால மீன்களான ஆசியன், ஸாண்டர், பிரீம், பைக் போன்றவை அக்காலத்தில் இல்லை. மேலும் பத்துக்கோடி வருஷங்களுக்குப்பின் (இக்காலத்தை கார்போனிபெரஸ் காலம் Carboniperoes Period என்றழைப்பர்) பூதாகரமான