பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

79


பறவைகளும் குட்டி போட்டு, பால் கொடுக்கும் விலங்குகளும் பெருகின. அவை எண்ணிக்கையில் மற்றைய வகை விலங்குகளுக்கும் மிகுதியாயின. ஆனால், தற்காலப் பிராணிகளை அவை ஒத்திருக்கவில்லை. அக்காலத்தில் வாலில்லாக் குரங்குகள், குதிரைகள், காளைகள், மான்கள், யானைகள் போன்ற பிராணிகள் தோன்றவில்லை.

மூன்றாம் கர்ப்பகால மத்தியில்தான் படிப்படியாக நம் காலத்து பிராணிகளைப் பலவகையில் ஒத்திருக்கும் விலங்கினங்கள் தோன்றின. அக்கால முடிவில், மான், குதிரை, காண்டாமிருகம், யானைமுதலியன தோன்றின. இக்காலத்தில் வாலில்லாக் குரங்குகளும் தோன்றின. பின்பு மனிதனை ஒத்திருக்கும் குரங்குகள் தோன்றின. (AnthropoidApes)

பத்து லட்சம் வருடங்களுக்கு முன் (அதாவது மூன்றாவது கர்ப்பகால முடிவுகளும் நான்காம் கர்ப்பகால ஆரம்பத்திலும்) குரங்கு மனிதன் தோன்றினான் ‘பிதிகாந்திரோபஸ்’ என்றழைக்கப்படும் அவன் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள இணைப்புச் சங்கிலியாவான். அம்மனிதன் வேலைசெய்யச்சில கருவிகளைப் பயன்படுத்தினான். அம் மனித இனம் மாய்ந்தது. அவர்களது வழித்தோன்றல்களே நமது மூதாதையர் நான்காவது கர்ப்பகாலத்தில் நீண்ட பனிக்காலத்தில், யானை போன்ற மாமத் என்ற மிருகமும், ரெய்ன்டீர் என்ற மானும் வாழ்ந்திருந்த காலத்திலேயே மனிதனும் வாழ்ந்து வந்தான். அவன் உடலமைப்பில் தற்கால மனிதனை எல்லா வகையிலும் ஒத்திருந்தான்.