பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புராதன சமுத்திரத்தில் உயிர்களின் பரிணாம வளர்ச்சி

50 கோடி வருஷங்களுக்கு முன் (காம்பிரியன் காலம்) உலக வரலாற்றில், உயிர்கள் சமுத்திரத்தில்தான் காணப்பட்டன. இக்காலத்தில் கீழ்த்தரமானதும், உயர்தரமானதுமான இருவகை கடற்பூண்டுகள் இருந்தன. (1), (2).. முதுகெலும்பற்ற பலவகைப் பிராணிகளும் இருந்தன.

அவை நுண்நோக்கியின் வழியாக மட்டும் காணக்கூடிய ஒற்றை ஜீவ அணு உயிர்களாக இருந்தன. ‘ஸ்பாஞ்ச்’ என்ற கடற்பஞ்சும், அவற்றோடு உறவுடைய ஆர்கியோசிதாய் என்ற பூண்டும் இருந்தன. (2) மெடுஸே, (3) அன்னிலிடா, (4, 5) சகிட்டா, (6) பிராகியோடா, (7, 8) முதன்முதல் தோன்றிய மொலஸ்க், (9) டிரிலிபைட்கள், முதலியனவும் இருந்தன. அவற்றுள் சில நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியவை. (10) மற்றவை, கடல் வெள்ளரிக்காய் என்றழைக்கப்படும் ஒரு வகைப்பிராணி சமுத்திரத்தினடியில் ஊர்ந்து செல்லக்கூடியது. (11, 12, 13) நீந்தக்கூடியன.