பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நிலத்தில் வாழ்க்கையின் வெற்றி

சுமார் 22 1/2 கோடி வருஷங்களுக்கு முன்னர் பெரணிகள் மறைந்து அவற்றினும் வாழ்க்கையில் முன்னேறிய தாவரங்கள் தோன்றின. வறண்ட பிரதேசத்தில் வாழக்கூடிய ஊர்வன பெருகிவிட்டன. நீரிலும் நிலத்திலும்

வாழக்கூடிய உயிர்கள் அருகி மறைந்துவிட்டன. ஆனால் புதிய பிராணி களில் சில அவற்றையே ஒத்திருந்தன. சாகபட்சணிகளான மிகப்பெரிய ஊர்வன, பல்லற்ற சாகபட்சணிகள் ஆகிய உயிர்கள் பெருகின. அவற்றுள் பல்லிகள் அமைப்பில் ஒத்திருந்த மிகப்பெரிய ஊரும் பிராணிகள் (டினோசார் என்று பெயர்) உயிர்களனைத்திலும் பெரிதாயிருந்தது.