பக்கம்:உயிரில் கலந்தது.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


ஒரு நியதியாக ஆகிறது. அதன் மூலம்தான் வாழ்க்கைக்கு ஒரு பொருள்-அர்த்தம் கிடைக்கிறது. ஏன், உங்களுக்கு ஆண்ட வனைப் பிடிக்காதோ?”

‘ஸார், ஸார்! என்ணே நாத்திகத்தின் தலைவியாகக் கணித்து விடாதீர்கள். நான் ஆண்டவனை நம்பாமல் இருப் பேன? இருக்க முடியுமா? அவ்வாறு நம்பாது இருந்திருந்தால்’ நான் அல்லல்பட்டு, வெந்து நொந்து, கடைசியில் என் ஆண்ட வனத் தேடிவந்திருக்க வாய்க்குமா?”

தவசீலி இப்போதும் ஞானசீலனைப் பார்த்தாள். ஆனல் இந்தப் பார்வையில் முன்பில்லாத ஒரு புது உரிமையும் நூதன மான உறவும் பொதிந்திருந்தன. தன் நெஞ்சிலும் நினைவிலும் கண்ணும் பூச்சி ஆடிக்காட்டியவாறு இந்த வாணியை அனு பவித்த நிலையில் இருந்த ஞானசீலனுக்கு இவளைப் பார்க்க வேண்டுமென்னும் சிந்தனை எங்ஙனம் ஏற்பட முடியும்? மனம் வாணியை எண்ணியது. ஆனல் மனத்தின் மனத்தில் தவசீலி யின் சொற்கள், குகையில் கிளம்பும் எதிரொலியாக முட்டி மோதிக்கொண்டு புறப்பட்டன. “நான் தப்பித்தேன்!” என்று முத்தாய்ப்பிட்டார் அவர்.

பதட்டத்துடன் இடைமறித்தாள் கதாசிரியை. ‘ஏன், ஏதாவது விபத்து ஏற்பட்டதா லார்’

“அப்படியெல்லாம் நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை. நீங்களும் என் மாதிரியாகவே ஆத்திகமனம் கொண்டிருப் பதை எண்ணிய எனக்கு, ஏதோ ஒரு விபத்தை எதிர்பார்த்து, உடனேயே அவ்விபத்து விலகிவிட்டதுபோல ஒரு சாந்தி உண்டானது. அவ்வளவுதான். ஆண்டவன் நல்லவன்!”

“ஆமாம் ஸார். ஆண்டவன் நல்லவன்; என் ஆண்டவன் இன்னும் நல்லவர்’ என்று பதிலிறுத்த அவள், ஓரக்கண்ணுல் அவரை ஏறிட்டுப் பார்த்து, அக்கணமே, அவ்வாறு பார்ப் பதற்கு நாணம் பூண்டவளைப் போல, தலையையும் விழிகளையும் தரையை நோக்கிக் குனிந்து சாய்த்தபோது, அவர் அவளைக் கண்டார். அவர் அவளது செழித்துப் பூரித்திருந்த அழகின்