பக்கம்:உயிரில் கலந்தது.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


அன்புக் கரங்களிலே ஒப்படைத்து அடைக்கலம் புகவே நான் வந்திருக்கிறேன்!” -ع*

நீர் மட்டத்தில் தளும்பி நிற்கும் தாமரை மொட்டி னின்றும் நீரலைகளின் பெருக்கத்தின் காரணமாகப் பட்டுத் தெறிக்கும் நீர் முத்துக்களுக்குச் சமதையாக, தவசீலியின் நேத்திரங்கள் கடுநீர் உகுத்தன.

“உயர்நிலை'யில் கருங்கல் துண்டுபட்டுவிட்டாற்போல், ஞானசீலன் துடிதுடித்துப் போனார். உள்ளத்தின் உள்ளம் ஆட, உள்ளத்தின் துடிப்பு ஆடியது. கண்ணின் மணிப்பார்வை நடுங்கியது. மெய் விதிர்த்தது. ஆம்; மெய் விதிர்த்தது: அவரது இதயம் அழுதது; ஆனால், எங்கோ தொலே தூரத்தி லிருந்து தொல்வினை நமட்டுச் சிரிப்பு ஒன்றை நையாண்டிப் பான்மையுடன் வெளியிட்டுக் கொண்டிருந்தது மட்டும் அவருக்குத் துல்லியமாகக் கேட்டது. “தவ...சீவி! நீங்கள் ஆண்டவனைச் சந்தித்ததாகச் சற்றுமுன் கூறினீர்கள். ஆணுல் நானே விதியைச் சந்தித்திருக்கிறேன். காதல், தியாகம், ஆண்டவன் என்று ஏதேதோ கேட்டு என்னைக் குழப்பியதற் குரிய காரணம் இப்பொழுதுதான் எனக்குப் பிடிபடுகிறது. என் வாணி உங்கட்குத் தோழி என்று சிலாகித்துப் பேசினீர் களே? அவளை நான் மனம் புரிந்துகொள்ள நாள் குறித்துள்ள உண்மையை வாணி உங்களிடம் அறிவிக்கவில்லையா? இதோ பாருங்கள், எங்கள் கல்யாண முகூர்த்தப் பத்திரிகையின் பிரதியை’

விரிந்தது, வதுவை மடலின் கையெழுத்து நகல்.

“சிரஞ்சீவி ஞானசீலனுக்கு செ ள பாக் கி ய வ தி வாணியை..!”

தவசீலி வாய்விட்டுப் படித்தாள். இமை வரம்புகளை விரல் நகம்கொண்டு துடைத்தாள். நிமிர்ந்து உட்கார்ந்தாள். காற்று நுகர்ந்த மேலாக்கின் இடதுபுறச் சேலை நுனியைச் சரிசெய்தாள். வெய்துயிர்ப்பு வெடித்தது.