பக்கம்:உயிரில் கலந்தது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í GS

படரலாயின. தெரிந்துமா, இப்படி என்னைச் சோதிக்கத் தலைப்பட்டீர்கள்?”

கண்களும் கண்களும் மோதின. ‘உங்களை-என் ஆண்டவனச் சோதிக்கும் தைரியம் எனக்கு ஏது, ஸார்?

‘பிறகு...?” ஞானசீலனின் கேள்விக்கு விடை பகர வந்தவளென அங்கு தோன்றிய வாணி, “நீங்கள் தவசீலியையே கல்யாணம் செய்து கொள்ளுங்க...அதுவேதான் தெய்வசித்தமாகவும் இருக்கவேணுமுங்க. ஆமாங்க!” என்று, ஏதோ முன்கூட்டியே தீரயோசித்து முடிவு செப்தவள் போன்று அவ்வளவு தீர்க்க மான குரலெடுத்து, சாவதானமாகக் கூறினுள்.

கனவுகளை வளர்த்தவளே கனவுகளை அழித்துவிடப் பார்க்கிருளே? -

ஞானசீலனின் இதயம் அதிர்ந்தது. ‘வாணி, என்ன சொல்கிறாய்?”

“ஸார், ஆசிரியர் லார்! இதைப் பார்த்திருப்பீங்க: நீங்க பார்க்க வேணுமின்னுதான் ஒரு வாட்டி இந்த டைரியை உங்க பைக்குள்ளே திணிச்சேன். இப்ப திரும்பியும் ஒரு தரம் படியுங்க!”

அவர் பார்வைக்கு அந்தப் பழைய நாட்குறிப்புப் பக்கம் இலக்கானது. முன்னேற்பாட்டின்படி அப்பக்கத்தில் மட்டும் காகிதக் கிழிசல் ஒன்று செருகி வைக்கப் பெற்றிருந்தது. *விழித்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டால் தோல்விகள் கண் உறங்கி விடும் என்பார்கள். சரி; ஆளுல், என் வாணி உறங்காமல்தான் இருக்கிருள். அவளைப் போலவே விதியும் உறங்காமல் இருந்து தொலைக்கின்றதே? வாழ்க்கை எனும் பேரேட்டில் கனவுகள் வரவாகின்றன; ஆளுல் முடிவில் ஐந்தொகை பார்க்கையில், ஏமாற்றங்களல்லவா நிகர லாபமா கின்றன? துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்கிறார்களே?