பக்கம்:உயிரில் கலந்தது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is 4.

மீண்டும் அவளுக்குச் சோர்வு வந்தது. மனக்களைப்பு வேறு.

“வாணி, உன்னுடைய இந்தத் தர்க்கத்தை சினிமாவில் பேசச் சொல்லிக் கேட்டால்கூட, யாரும் இயற்கைக்கு மீறிய “டயலாக்’ என்று ஒதுக்கி விடுவார்களே! நாவலில் கூட இம் ம்ாதிரிப்பட்ட தியாகங்களைக் காண முடியாதே, வாணி ? சிரித்துக் கொண்டிருந்தவனே ஏன் அழச் செய்கிறாய்? சிந்தித் துக்கொண்டிருந்தவனே எதற்காக துடிக்கச் செய்கிறாய்? இலக்கண விதி முறைகளைக் கடந்த பாடலாக நீ வேஷம் போட்டு நடிக்க எத்தனை நாட்கள் கனவு கண்டாய்? உன் தியாக மனத்தை நிரூபிக்க நான்தாளு அகப்பட்டேன்? என்னை ஆட்டிப் படைக்க தவசீலியை ஆண்டவன உன் கண்களில் காட்டினன்? ஐயோ!” சீறிஞர்.

“ஸ்ார்...ளார்’ என்று உணர்ச்சி பீறிட இடைவெட்டிக் கத்தினுள் வாணி. ‘நான் வேஷம் போட்டு நடிக்கிறேன? எவ்வளவு லகுவாகச் சொல்லிவிட்டீர்கள்? சரி, நான் வரு கிறேன்!” என்று சொல்லிப் புறப்பட்டாள் வாணி,

அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில், ‘வாணி! வாணி ! நில்லம்மா!” என்று கூக்குரலிட்டவாறு கோசலை அம்மாள் கதறிய சத்தம் கேட்டது.

ஞானசீலன் ஓடினர். தவசீலியும் விரைந்தாள். ‘விஷம் என்று லேபிள் ஒட்டப்பட்டிருந்த சின்னச் சீசா ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள் வாணி, விழிப்புனல் வடிந்துகொண்டே யிருந்தது. துணியின் இரு மருங்கிலும் இருபுள்ளிகள் துலாம்பரமாகத் தெரிந்தன.

“நான் தடுக்காமல் இருந்தாக்க, இந்நேரம் வாணி. விஷத்தைக் குடிச்சிருக்கும் தம்பி’ என்று கலங்கிய தொனி யில் சொன்னாள் ஞானசீலனின் தாய்.

அப்பொழுதுதான் வாணி தலைநிமிர்ந்தாள். “வாணி என்னை மன்னித்துவிடு. ஆண்டவனைப் பற்றி இதுவரை எவ்வளவோ சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன்