பக்கம்:உயிரில் கலந்தது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 15

நான். ஆணுல் இன்றுதான் அவனைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தலைப்பட்டேன். அலகிலா விளையாட்டுடையவன் ஆண்டவன் என்பதைக் கண்முன்னே நிதர்சனமாகப் புரிந்து கொண்டேன் நான்! இனி, என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்? சொல்,

வாணி, சொல்’ என்று நைந்த குரலே மறைத்தவராகக் கெஞ்சினர் அவர்.

“என் உயிர்த் தோழி தவசீலிக்கு உங்கள் உள்ளத்தைக் கொடுங்கள்!” என்று வாணி கெஞ்சிய குரலில் கோரினுள்.

“உன் தியாகத்தை வாழ்த்தி நிறைவேற்றவும், உன் சிநேகிதியின் காதலை வாழ்த்தி அங்கீகரிக்கவும் நான் கடைசி வரை முயலுவேன். இது உறுதி. ஆளுல், எனக்குச் சில நாழிகைப் பொழுதிற்கு ஒய்வு கொடு. நாளே இரவுக்குள் உனக்கு செய்தி அனுப்பிவிடுகிறேன், வாணி”

சிறு குழந்தையாகி, நெஞ்சடைக்க வார்த்தைகளைக் கக்கினர் கதாசிரியர்.

தவசீலியின் கைகளைப் பற்றியவாறு வழி நடந்தாள் வாணி ‘தவசீலி, உனக்குத் தத்தம் செய்து கொடுத்த இவ் வுயிரை என்னுடைய அவசரத் துணிவிஞல் ஆத்திரப்பட்டுப் போக்கிக்கொள்ள முயற்சி செய்த என் அறியாமையை மன்னித்துவிடு, தவசீலி, மன்னித்துவிடு! உன்னிடம் வாக்குக் கொடுத்தபடி, என்னை மாலையும் கழுத்துமாக நீ பார்த்து ரசிப்பதற்கு என்னை நான் பக்குவப்படுத்திக் கொள்ளவும் செய்கிறேன், தவசீலி!” என்று சொல்லிக் கொண்டே வழி தடந்தாள் வாணி