பக்கம்:உயிரில் கலந்தது.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 2

மூடிந்த தேர்தலைப் பற்றி வழக்கம் போல காரசாரமான பேச்சு வார்த்தைகள் நடைபெறலாயின. பிறகு, அமைதி வந்தது.

புகை பிடித்துக்கொண்டே ஞானசீலன் மேஜைப் வார்த்தபோது, அவரது பார்வைக்குத் தவம் இருந்த தொடர் கதையின் அச்சுப்படிவங்கள் .ெ த ன் ப ட் ட ன. திருத்திக் கொண்டே வந்தார். -

ஒரிடம்: “...தியாகம் என்ற குணநலன் சொல்விக்கொண்டு வரு வீது இல்லை; சொல்லியும் தெரிவது கிடையாது. உள்ளத்தில் உதிரத்துடன் ஊறிப் பக்குவப்படும் இப்பண்புதான் மனிதனை மனிதனுக உயர்த்திக் காட்ட வல்லது. பிறவா வரம் வேண்டு மென்றார்கள் பண்டைப் பெரி யார் க ள். அது பொருந்த வேண்டாமா? பிறப்பு வேண்டும்; ஏன், தெரியுமா? பிறப்பு இல்லையேல் மனிதனுக்குத் தியாகம் செய்ய வாய்ப்பு ஏது? தியாகம்; விளம்பரத்திற்கு அப்பாற்பட்டது. ஆனல், அன்புத் தளைக்கு உட்பட்டது: சொல்லைச் செயற்படுத்தி, செயலை வாழ்க்கையாக்கி வாழ முனைபவனே- வாழத்துணிபவனே மனிதன்!-”

ஞானசீலன் எழுதி வருகின்ற வளர்கதையின் தலைவனினை வாய்மொழியாக உதிர்ந்திருந்த வாசகங்கள் அவை. அவற்றினை வாய்மை மொழிகளாகவே அவர் உணர்ந்தார். அவருக்குச் சொந்தமான இலக்கிய நெஞ்சம் எழுதிக் கொடுத்த தத்துவம் அவருக்கு நிறைவு தந்தது. ‘பூவா, தலையா?’ என்ற இரண்டு பட்ட விளுக்குறியீட்டுக்கும் மீறிய யதார்த் த ச் சொல் லடுக்காகவே அவருக்குப் பட்டது. எழுத்தாளன் எண்ணத் தால் உயர்ந்து எழுத்தால் உயரவேண்டும்!”

‘நடந்தாய், வாழி, காவேரி’ எனும் மகுடம் ஏற்ற தொடர்கதையின் முன் பகுதிகள் அச்சுவடிவமாய் இருந்தன. நாயகியின் குணச்சித்திர அமைப்பில் ஒரு கீறல் விழுந்து விட்டது. கீறல் விழுந்த இசைத் தட்டாக அவருள் புலம்பல் எழுந்தது. х , .